தமிழ்நாடு

“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!

இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்காக டாக்டர் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க வேண்டும்!

“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

மக்களவையில் இன்று (11.12.2025) , நேரமில்லா நேரத்தில், முத்தமிழறிஞர் தலைவர் கலைஞர் அவர்களுக்கு இந்தியாவின் உயரிய விருதான ‘பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும் என திமுக எம்.பி தமிழச்சி தங்கப்பாண்டியன் வலியுறுத்தினார்.

அவையில் தமிழச்சி தங்கப்பாண்டியன் எம்.பி பேசியதாவது:- “திராவிட மரபின் முன்னோடி, முத்தமிழறிஞர் டாக்டர் கலைஞர் அவர்களைப் போன்ற ஒரு மாபெரும் ஆளுமையை இந்த உலகம் அரிதாகவே கண்டிருக்கிறது. அவர் திராவிட மரபின் ஒரு முன்னோடி. மேலும் அவரது தொலைநோக்குப் பார்வைகொண்ட கொள்கைகள் மற்றவர்கள் பின்பற்றுவதற்கான முன்மாதிரியாக மாறியுள்ளன. அவர் சமூக நீதிக்கும், நல்லாட்சிக்கும் ஒரு சிறந்த எடுத்துக்காட்டு ஆவார்

இந்திய அரசியலில் அவரது நீண்ட பயணம் அவரது 16 வயதிலேயே தொடங்கியது. 1957 முதல் 2016 வரை 60 ஆண்டுகளாக, கலைஞர் தனது அரசியல் வாழ்வில் போட்டியிட்ட அனைத்து சட்டமன்றத் தேர்தல்களிலும் வெற்றி பெற்ற தனித்துவமான பெருமையைப் பெற்றுள்ளார். அவரது அரசியல் சாதுரியமும், இலக்கியத் திறமையும் அவரை அவரது சமகாலத்தவர்களை விட உயர்ந்தவராக ஆக்கியுள்ளன.

ஏழை மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் தேவைகளைப் புரிந்துகொள்ளும் அவரது நிகரற்ற திறன், மக்களின் இதயங்களில் அவருக்கு ஒரு நிரந்தர இடத்தைப் பெற்றுத் தந்துள்ளது. டாக்டர் கலைஞர், தனது பண்டைய தமிழ் இலக்கிய அறிவிற்காகவும், அவரது பேச்சாற்றலுக்காகவும் உலகளவில் அறியப்பட்டவர்.

நாடகங்கள் மற்றும் தமிழ் சினிமாவில் அவர் எழுதிய வசனங்கள், அக்காலத்தில் நிலவிய மூடநம்பிக்கை, சாதி ஆதிக்கத்தின் இருண்ட தீமைகளில் இருந்து தமிழ் சமூகத்தை விடுவித்தன.

அவரது சிந்தனையைத் தூண்டும் பேச்சுகளும், எழுத்துகளும் தமிழ் சமூகத்தில் ஒரு புரட்சியை ஏற்படுத்தி, தமிழ்நாட்டில் திராவிட மாடல் அரசாங்கத்திற்கு அடித்தளமிட்டன. அவர் சமூக நீதி, சமத்துவம் மற்றும் மத நல்லிணக்கத்தின் பாதுகாவலர்.

“முத்தமிழறிஞர் கலைஞருக்கு ’பாரத ரத்னா’ விருது வழங்க வேண்டும்” - தமிழச்சி தங்கப்பாண்டியன் MP வலியுறுத்தல்!

அவர் கையெழுத்திட்ட ஒவ்வொரு திட்டமும், ஆணையும் எதிர்காலத் தலைமுறை அரசியல்வாதிகளுக்கு ஒரு முன்மாதிரிக் குறியீடாக மாறியுள்ளது. கலைஞரின் நகைச்சுவை உணர்வு, அறிவாற்றல் மற்றும் சமயோசித ஆற்றல் ஆகியவை மனித வரலாற்றில் என்றென்றும் நினைவுகூரப்படும். அவர் காட்டிய பரிவு, கருணை, அன்பு அவரை அரசியலில் முதலிடத்தில் நிறுத்தியுள்ளன. அவர் தனது காலத்தின் அனைத்து இந்திய குடியரசுத் தலைவர்கள் மற்றும் பிரதமர்களுடன் சிறந்த உறவைக் கொண்டிருந்தார்.

எல்லாவற்றுக்கும் மேலாக, அவர் தனது வாழ்நாள் முழுவதையும் இந்த நாட்டு மக்களின் நலனுக்காகவும், குறிப்பாக இந்த நாட்டின் ஏழை, பின்தங்கிய மக்களின் நலனுக்காகவும் அர்ப்பணித்தார்.

இந்திய அரசியல், இலக்கியம் மற்றும் சமூகத்துக்கு அவர் ஆற்றிய மகத்தான பங்களிப்புகளுக்காக டாக்டர் கலைஞருக்கு இந்தியாவின் உயரிய குடிமகன் விருதான பாரத ரத்னா விருதை வழங்கி கவுரவிக்க ஒன்றிய அரசை நான் வலியுறுத்துகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories