சினிமா

"பீச் பழ மொட்டு மிகஅழகாக இருக்கும்; ஆனால்...” : Travellers and Magicians படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

ஆசை, காமம், குரோதம் போன்றவை மனிதனை எப்படி அலைக்கழிக்கிறது என்பதை ஒரு பவுத்தக் கதை வழியாக புத்த பிட்சு ஒருவர் பயணம் நெடுக சொல்லிக்கொண்டே வருகிறார்.

"பீச் பழ மொட்டு மிகஅழகாக இருக்கும்; ஆனால்...” : Travellers and Magicians படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
ராஜசங்கீதன்
Updated on

Travellers and Magicians என்றொரு பூட்டானியத் திரைப்படம். முக்கியமான படம்.

பூட்டானில் உள்ள ஒரு கிராமம் ஒன்றில் அஞ்சல் அதிகாரியாக வேலை பார்க்கும் ஒருவன், அமெரிக்காவுக்குச் செல்ல வேண்டும் என்பதை லட்சியமாக கொண்டிருக்கிறான். ஒருநாள் அவன் வேலையிலிருந்து விடுவிக்கப்பட்டு விடுகிறான். குதூகலமாக கிராமத்தில் இருந்து கிளம்புபவன் பேருந்தை தவற விடுகிறான். வேறு வாகனங்களை எதிர்பார்த்துக் காத்திருக்கிறான்.

ஆப்பிள் வியாபாரி ஒருவரும் வந்து சேர்கிறார். பிறகு ஒரு புத்த பிட்சு. அதற்குப் பிறகு, ஒரு முதியவரும் அவரின் அழகிய மகளும். அனைவரும் காத்திருக்கிறார்கள். நடக்கிறார்கள். அமெரிக்கக் கனவு கொண்டவனும் வேறு வழியின்றி ஏனையோருடன் பயணிக்கிறான். கொஞ்சம் நடை, ஒரு லாரி என இரண்டு நாட்களாக பயணிக்கிறார்கள்.

அஞ்சல் அதிகாரிக்கு அமெரிக்கா ஒரு கனவு பூமி. அதற்கான குணங்கள் எல்லாவற்றையும் அவன் கொண்டிருக்கிறான். தன்னைப் பற்றி மட்டும் கவலைப்படுகிறான். மக்களை இளக்காரமாக அணுகுகிறான். நேரமாகிறது என அங்கலாய்க்கிறான். எல்லாம் அந்த முதியவர் தன் மகளுடன் வந்து சேரும் வரையில்தான். அவள் மீது அஞ்சல் அதிகாரி லேசான நேசம் கொள்கிறான்.

இவற்றுக்கு எல்லாம் இடையில் ஆசை, காமம், குரோதம் போன்றவை மனிதனை எப்படி அலைக்கழிக்கிறது என்பதை ஒரு பவுத்தக் கதை வழியாக புத்த பிட்சு ஒருவர் பயணம் நெடுக சொல்லிக்கொண்டே வருகிறார்.

"பீச் பழ மொட்டு மிகஅழகாக இருக்கும்; ஆனால்...” : Travellers and Magicians படத்தை மிஸ் பண்ணிடாதீங்க!

இறுதியில், ஒரு வாகனம் வருகிறது. இருவருக்கு மட்டும் இடமிருக்க, முதியவரும் மகளும் அமெரிக்கக் கனவு காண்பவனுக்கும் புத்த பிட்சுவுக்கும் வாய்ப்பு கொடுத்து அனுப்பி வைக்கிறார்கள்.

ரயில் சினேகம் போன்றொரு மெல்லிய காதலை வளர்த்திருந்த அமெரிக்கக் கனவு கொண்டவனை புத்த பிட்சு கிண்டல் அடிக்கிறார். இருவரும் சிரிக்கின்றனர். வாகனம் வளைவில் திரும்பி மறைகிறது.

பூட்டானின் அழகிய மலைத்தொடர் பெரும் மவுனத்துடன் அவர்களைப் பார்த்துக் கொண்டிருக்கிறது.

முதியவரின் மகளை பிரிய விரும்பாமல் பிரிந்து, கையசைத்துக் கொண்டிருக்கும் அஞ்சல் அதிகாரியிடம் புத்த பிட்சு ஒரு வசனம் சொல்வார்:

"பீச் பழ மொட்டு மிக அழகாக இருக்கும். ஆனால் அந்த அழகுக்குக் காரணமே அது தற்காலிகம் என்பதுதான்"

மிக அழகான, அகப்பயணத்துக்கான படம். பார்த்துவிடுங்கள்!

banner

Related Stories

Related Stories