சினிமா

ரூ.200 கோடி மோசடி... 'இரட்டை இலை' சின்ன மோசடியில் சிக்கிய சுகேஷின் மனைவியை கைது செய்த டெல்லி போலிஸ்!

தொழிலதிபர் மனைவியிடம் ரூ.200 கோடி மோசடி செய்த வழக்கில் நடிகை லீனா மரியாவை டெல்லி போலிஸார் கைது செய்துள்ளனர்.

ரூ.200 கோடி மோசடி... 'இரட்டை இலை' சின்ன மோசடியில் சிக்கிய சுகேஷின் மனைவியை கைது செய்த டெல்லி போலிஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

'மெட்ராஸ் கஃபே' இந்தி படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை லீனா மரியா. இவர் தமிழில் வெங்கட் பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'பிரியாணி' படத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் தொழிலதிபர் ஒருவரின் மனைவியிடம் 200 கோடி ரூபாய் மோசடி செய்ததாக டெல்லி போலிஸார் நடிகை லீனா மரியாவை கைது செய்துள்ளனர். மேலும் அவரது காதலர் சுகேஷ் சந்திரசேகரும் இதற்கு உடந்தையாக இருந்துள்ளார்.

இந்த மோசடிக்கு உதவியாக இருந்த வீனாவின் மேலாளர் சாமுவேல், வழக்கறிஞர் மோகன்ராஜ், கமலேஷ் கோத்தாரி, அருண் முத்து உள்ளிட்ட நான்கு பேரையும் போலிஸார் கைது செய்தனர்.

நடிகை லீனாவின் கணவர் சுகேஷ் சந்திரசேகர் மீது ஏற்கனவே 21 வழக்குகள் உள்ளன. மேலும் 'இரட்டை இலை' சின்னம் பெற்றுத் தருவதாகப் பல கோடி ரூபாய் மோசடி செய்த புகாரிலும் அமலாக்கத்துறை விசாரணை நடத்தி வருகிறது.

அண்மையில் கூட இந்த வழக்கு தொடர்பாகச் சென்னையில் உள்ள அவரது சொகுசு பங்களாவில் பத்துக்கும் மேற்பட்ட சொகுசு கார்களை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories