சினிமா

உதயநிதி ஸ்டாலினின் ’சைக்கோ’ படம் சிறந்த நடிகர் உட்பட 9 விருதுகளுக்கு பரிந்துரை!

மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ" SIIMA 2020" விழாவில் 9 விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

உதயநிதி ஸ்டாலினின் ’சைக்கோ’ படம் சிறந்த நடிகர் உட்பட 9 விருதுகளுக்கு பரிந்துரை!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

Double Meaning Productions சார்பில் அருண்மொழி மாணிக்கம் தயாரிப்பில், இயக்குநர் மிஷ்கின் இயக்கத்தில், உதயநிதி ஸ்டாலின் நடித்த "சைக்கோ" திரைப்படம், தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருது விழாவான "SIIMA 2020" திரை விழாவில், 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.

"சைக்கோ" திரைப்படம் 9 பிரிவுகளில் விருதுகளுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. அதில், சிறந்த இயக்கம் (மிஷ்கின்), சிறந்த நடிகர் (உதயநிதி ஸ்டாலின்), சிறந்த இசை (இளையராஜா), சிறந்த பாடல் - உன்ன நினைச்சு (கபிலன்), சிறந்த பின்னணி பாடகர் ஆண் - உன்ன நினைச்சு (சித் ஸ்ரீராம்), சிறந்த அறிமுக தயாரிப்பாளர் ( Double Meaning Productions ), சிறந்த ஒளிப்பதிவு (தன்வீர் மிர்). ராஜ்குமார் பிச்சுமணி சிறந்த வில்லன் மற்றும் சிறந்த அறிமுக நடிகர் ஆகிய இரண்டு பிரிவுகளின் கீழ் பரிந்துரைக்கப்பட்டுள்ளார்.

தென்னிந்திய சர்வதேச திரைப்பட விருதுகள் (SIIMA 2020) 9வது பதிப்பு செப்டம்பர் 18 & 19 தேதிகளில் ஐதராபாத்தில் நடைபெறுகிறது.

banner

Related Stories

Related Stories