சினிமா

சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய அஜித் குமார்: வைரலாகும் 21 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள்!

சிறுவர்களின் ஆசையை நிறைவேற்றிய அஜித் குமார்: வைரலாகும் 21 ஆண்டுகளுக்கு முந்தைய புகைப்படங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவராக இருக்கும் நடிகர் அஜித் குமார் சமூக வலைதளங்கள் எதிலும் இல்லாமல் இருந்தாலும் அவரது ரசிகர்களால் நாள்தோறும் லைம் லைட்டிலேயே இருந்து வருகிறார்.

தான் நடிக்கும் படங்கள் என எந்த திரைப்பட நிகழ்வுக்கும் பங்கேற்காத அஜித் வாக்களிக்க வரும் போதும், படபிடிப்பு அல்லது அவரது மற்ற பணிகளான துப்பாக்கிச் சுடுதல், ட்ரோன் கேமிரா இயக்குதல் போன்ற நிகழ்வுகளின் போது பகிரப்படும் ஒரு புகைப்படங்கள் தொடர்ந்து ட்ரெண்டிங்கில் இருந்து வருகிறது.

அதன்படி அண்மையில் வலிமை படம் குறித்த ஷேஷ்டேக் பெருமளவில் ட்ரெண்டானதும் செய்தியாக மாறியது. இருப்பினும் அவருடன் பணிபுரிபவர்களுக்கோ அல்லது எவருக்கேனும் அஜித் உதவி செய்திருந்தால் அவையும் ஊடகங்களில் நேரடியாக வெளிவராமல் வைத்திருப்பதை வழக்கமாக கொண்டிருக்கிறார். அவ்வகையில் ஜனவரி 26ம் தேதி 2000ம் ஆண்டு அன்று 60 சிறுவர்களுக்கு முதல் முறையாக விமானத்தில் பயணிக்கும் அனுபவத்தை ஏற்படுத்தி கொடுத்திருக்கிறார் நடிகர் அஜித்.

அது தொடர்பான புகைப்படங்கள் தற்போது சமூக வலைதளங்களில் வெளியானதை அடுத்து அஜித் ரசிகர்கள் அதனை வைரலாக்கி வருகின்றனர். முன்னதாக 100 குழந்தைகளை விமானத்தில் அழைத்துச் சென்ற நடிகர் சூர்யா சூரரைப் போற்று படத்தின் பாடல்களை நடுவானில் நடத்தினார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories