சினிமா

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் 'அசுரன்' நடிகர்... இந்திக்கு செல்லும் 'ஓ மை கடவுளே' : சினிமா துளிகள்!

நடிகர் சந்தானம் நடித்துள்ள ‘டிக்கிலோனா’ படத்தின் புதிய ட்ரைலர் இணையத்தை கலக்கி வருகிறது.

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் 'அசுரன்' நடிகர்... இந்திக்கு செல்லும் 'ஓ மை கடவுளே' : சினிமா துளிகள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இணையத்தை கலக்கும் ‘டிக்கிலோனா’ படத்தின் புதிய ட்ரைலர்..!

நடிகர் சந்தானம் நடிப்பில் டிக்கிலோனா படம் வரும் செப்டம்பர் 10ஆம் தேதி ஜீ5 தளத்தில் வெளியாக உள்ளது. கார்த்திக் யோகி இயக்கிருக்கும் இந்த படத்தில் சந்தானம் மூன்று வித்யாசமான ரோல்களில் நடித்துள்ளார். இதில் இவருக்கு ஜோடியாக ஷிரின் மற்றும் அனகா நடித்துள்ளனர். டைம் ட்ராவல் படமான இது காமெடி நிறைந்த கமர்ஷியல் படமாக உருவாகியுள்ளது. இந்த படத்தின் ப்ரோமோஷனுக்காக படத்தின் டீஸர் மற்றும் பாடல்கள் ஏற்கனவே வெளியாகியுள்ளது. இந்த நிலையில் படத்தின் ட்ரைலரை தற்போது வெளியிட்டுள்ளனர்.

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் 'அசுரன்' நடிகர்... இந்திக்கு செல்லும் 'ஓ மை கடவுளே' : சினிமா துளிகள்!

‘வடசென்னை’ அமீர் கதாப்பாத்திரத்தில் இளம் வாரிசு நடிகர்!

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியாகிய படம் ‘வடசென்னை’. தனுஷ், ஆண்ட்ரியா, அமீர், சமுத்திரக்கனி, ஐஸ்வர்யா ராஜேஷ் மற்றும் பலர் நடித்திருந்த இந்த திரைப்படம் விமர்சகர்களால் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. அதை தொடர்ந்து இதன் இரண்டாம் பாகம் உருவாகவிருப்பதாக அறிவிக்கப்பட்டது.

அதற்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் முடிவதற்குள் தனுஷும் வெற்றிமாறனும் அவர்களின் மற்ற படங்களை முடிக்க திட்டமிட்டுள்ளனர். இதனிடையே வெற்றிமாறன் ‘வடசென்னை’ படத்திற்கு முந்தைய கதையை படமாக்க திட்டமிட்டு வருவதாக ஒரு தகவல் கசிந்துள்ளது. இந்த கதையின் நாயகனாக அமீர் ஏற்று நடித்திருந்த ராஜன் கேரக்டர் இருக்கும் என சொல்லப்படுகிறது.

அந்த கேரக்டரில் நடிகர் கருணாஸின் மகன் கென் கருணாஸ் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. முன்னதாக வெற்றி மாறன் இயக்கத்தில் வெளியான அசுரன் படத்தில் கென் கருணாஸ் சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தியது குறிப்பிடத்தக்கது.

வெற்றிமாறனுடன் மீண்டும் இணையும் 'அசுரன்' நடிகர்... இந்திக்கு செல்லும் 'ஓ மை கடவுளே' : சினிமா துளிகள்!

இந்தியில் ரீமேக் ஆகிறதா `ஓ மை கடவுளே'?

புதுமுக இயக்குனர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் அசோக் செல்வன், ரித்திகா சிங், வாணி போஜன் நடிப்பில் வெளியாகி சூப்பர் ஹிட்டான படம் ‘ஓ மை கடவுளே’. இப்படம் தற்போது தெலுங்கு மற்றும் ஹிந்தியில் ரீமேக்காகிறது. இதன் தெலுங்கு பதிப்பையும் அஷ்வத் மாரிமுத்து தான் இயக்க உள்ளார். இந்த நிலையில் இதன் ஹிந்தி வெர்ஷன் குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

இதில் அபிஷேக் பச்சன் ஹீரோவாக நடிக்க ஷாலினி பாண்டே, மீஸான் ஜாஃப்ரி ஆகியோர் நாயகிகளாக நடிக்க இருப்பதாக சொல்லப்பட்டது. ஆனால், இந்த தகவலில் உண்மையில்லை என அவரவர் தரப்பில் இருந்து விளக்கம் கொடுக்கப்பட்டுள்ளது. தற்போது இதன் ஹிந்தி வெர்ஷனுக்கான ஸ்க்ரிப்ட் வேலைகள் தான் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. விரைவில் நடிகர்கள் மற்றும் இயக்குனர் குறித்த தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories