சினிமா

முடிவுக்கு வந்த ஷங்கர் - லைகா பிரச்சனை : மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படபிடிப்பு? - நடந்தது என்ன?

இயக்குனர் ஷங்கர், லைக்கா நிறுவனத்திற்கு இடையே இருந்த மோதல் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

முடிவுக்கு வந்த ஷங்கர் - லைகா பிரச்சனை : மீண்டும் துவங்கும் ‘இந்தியன் 2’ படபிடிப்பு? - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழில் தொடர்ந்து பிரம்மாண்ட படங்களை கொடுத்துவரும் தயாரிப்பு நிறுவனமான லைகா தயாரிப்பில் ஷங்கர் இயக்கத்தில் துவங்கப்பட்ட படம் ‘இந்தியன் 2’. பல சிக்கல்களை சந்தித்த இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் தற்போது முழுவதுமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

60 சதவீதத்திற்கும் மேலாக படப்பிடிப்பு பணிகள் முடிந்துள்ள நிலையில் மீதமுள்ள பணிகளை ஷங்கர் முடித்து கொடுக்க வேண்டும் என லைகா தரப்பில் இருந்து கேட்கப்பட்டது. இதனிடயே ஷங்கர் தனது மற்றப் படங்களில் கவணம் செலுத்த துவங்கியதால் படப்பிடிப்பு துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டது.

இதனால் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போதும் லைகாவிற்கு தீர்வுக் கிட்டாத நிலையில் சென்னையில் ஷங்கரை நேரில் சந்தித்து பேசிய லைகா நிறுவனம் சுபாஷ்கரன் ஷங்கருடனான மோதலை முடிவுக்கு கொண்டுவந்துள்ளார். இதனால் நிறுத்திவைக்கப்பட்டுள்ள ‘இந்தியன் 2’ வேலைகள் மீண்டும் துவங்கும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

‘அரண்மனை 3’ முதல் சிங்கிள் வெளியானது..!

சுந்தர். சி இயக்கத்தில் ‘அரண்மனை’ பட வரிசையில் வெளியாகி வரவேற்பை பெற்றுள்ள நிலையில் இதன் மூன்றாவது பாகம் அடுத்து ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. சுந்தர். சி இயக்கி நடிக்கும் இந்த படத்தில் ஹீரோவாக ஆர்யா நடிக்க நாயகிகளாக ஆண்டிரியா, ராஷி கண்ணா, சாக்‌ஷி அகர்வால் ஆகியோர் நடிக்கின்றன.

இதற்கான படப்பிடிப்பு வேலைகள் நடந்து முடிந்துள்ள நிலையில் போஸ்ட் ப்ரோடக்‌ஷன் வேலைகள் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. படத்தின் ப்ரோமோஷனுக்காக முதல் சிங்கிளை வெளியிட்டுள்ளது படக்குழு.

banner

Related Stories

Related Stories