சினிமா

மறைந்த ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை... நிறைவேற்றிய மனைவி - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!

மறைந்த நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி நிறைவேற்றியுள்ளார்.

மறைந்த ஆனந்த கண்ணனின் கடைசி ஆசை... நிறைவேற்றிய மனைவி - நெகிழ்ச்சியில் ஆழ்த்திய தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தொலைக்காட்சிகளில் பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டுமின்றி சில தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார். 2008ஆம் ஆண்டு வெளிவந்த வெங்கட் பிரபுவின் சரோஜா திரைப்படத்திலும் சிறப்புத் தோற்றத்தில் நடித்திருந்தார்.

இதற்கிடையே ஆனந்த கண்ணன் Bile Duct Cancer எனும் மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்ட நிலையில் கடந்த ஆகஸ்ட் 16ம் தேதி சிங்கப்பூரில் உயிரிழந்தார். அவரது இறப்புச் செய்தி ரசிகர்களுக்கும், திரையுலகினருக்கும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

இதையடுத்து மறைந்த ஆனந்த கண்ணனின் கடைசி ஆசையை அவரது மனைவி நிறைவேற்றியுள்ளார். ஆனந்த கண்ணன் உயிரிழப்பதற்கு முன்பு தனது மனைவியிடமும், குடும்பத்தினரிடம் "தான் இறந்த பிறகு யாரும் அழ வேண்டாம், என்னை மகிழ்ச்சியாக வழியனுப்ப வேண்டும்" என கேட்டுக்கொண்டுள்ளார்.

மரணப் படுக்கையிலிருந்தபோது அவர் கூறிய கடைசி ஆசையை அவரது குடும்பத்தினர் நிறைவேற்றியுள்ளனர். ஆனந்த கண்ணனின் இறுதி நிகழ்ச்சியில் அவரது குடும்ப உறுப்பினர்கள் யாரும் அழாமல் அவர் கேட்டுக்கொண்டதற்கு இணங்க இறுதிச் சடங்கைச் செய்து முடித்துள்ளனர். இந்தத் தகவல் அனைவரையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.

banner

Related Stories

Related Stories