சினிமா

பிரபல டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் திடீர் மறைவு... திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் நேற்று இரவு காலமானார்.

பிரபல டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் திடீர் மறைவு... திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!
Admin
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

பிரபல நிகழ்ச்சி தொகுப்பாளர் ஆனந்த கண்ணன் புற்றுநோயால் பாதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வந்த நிலையில் நேற்று இரவு காலமானார்.

2000ங்களில் பல்வேறு தொலைக்காட்சிகளில் பிரபல தொகுப்பாளராக இருந்தவர் ஆனந்த கண்ணன். சிங்கப்பூரைச் சேர்ந்த தமிழரான இவர் ஆர்.ஜேவாக பணியாற்றி, பின்னர் தொலைக்காட்சி நிகழ்ச்சித் தொகுப்பாளராக தமிழர்கள் மத்தியில் பிரபலமானார்.

நகைச்சுவையாக நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி ரசிகர்களின் மனதில் நீங்கா இடத்தைப் பிடித்தவர் ஆனந்த கண்ணன். நிகழ்ச்சித் தொகுப்பாளராக மட்டுமின்றி சில தொடர்களிலும் சில திரைப்படங்களிலும் முக்கிய வேடங்களில் நடித்துள்ளார்.

கடந்த ஏழு ஆண்டுகளால தொலைகாட்சிகளில் தலைகாட்டாமல் இருந்துவந்த ஆனந்த கண்ணன் சமீபத்தில் பிரபல தொலைக்காட்சி ஒன்றில் தொகுப்பாளராக ஒப்பந்தமாகியிருந்தார்.

பிரபல டி.வி. நிகழ்ச்சித் தொகுப்பாளர் திடீர் மறைவு... திரையுலகினர், ரசிகர்கள் அதிர்ச்சி!

இதற்கிடையே ஆனந்த கண்ணன் Bile Duct Cancer எனும் மிகவும் அரிதான புற்றுநோயால் பாதிக்கப்பட்டார். கடந்த சில நாட்களாக புற்றுநோயால் அவதிப்பட்டு வந்த ஆனந்த கண்ணன் நேற்று நள்ளிரவு காலமானார். அவருக்கு வயது 48.

ஆனந்த கண்ணனின் மறைவுக்கு திரையுலகப் பிரபலங்கள், ரசிகர்கள் எனப் பலரும் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories