சினிமா

'மாஸ்டர்' கதை வேஸ்ட்டு : நடிக்க மறுத்த சல்மான் கான் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!

விஜய் நடித்த ‘மாஸ்டர்' படத்தின் இந்தி ரீமேக்கிலிருந்து சல்மான்கான் விலகியுள்ளார்.

'மாஸ்டர்' கதை வேஸ்ட்டு : நடிக்க மறுத்த சல்மான் கான் - விஜய் ரசிகர்கள் அதிர்ச்சி!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிப்பில் வெளியான படம் 'மாஸ்டர்'. இப்படத்தில் விஜய் சேதுபதி, மாளவிகா மோகனன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். அனிருத் இசையமைத்தார்.

தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி என அனைத்து மொழிகளிலும் வெளியான 'மாஸ்டர்' பெரும் வரவேற்பைப் பெற்றது. இதையடுத்து இப்படத்தை இந்தி ரீமேக் செய்யத் திட்டமிட்டனர்.

‘மாஸ்டர்’ இந்தி ரீமேக்கில் விஜய் கதாபாத்திரத்தில் சல்மான் கான் நடிக்கவிருப்பதாகத் தகவல் வெளியானது. 'மாஸ்டர்' படத்தின் கதையை இந்திக்கு ஏற்றவகையில் மாற்றினால் நடிப்பதாக சல்மான் கான் தெரிவித்துள்ளார்.

இதையடுத்து சல்மான் கானுக்கு ஏற்றவகையில் ‘மாஸ்டர்’ கதை மாற்றியமைக்கப்பட்டது. ஆனால், கதை திருப்தியாக இல்லை என்று கூறி சல்மான்கான் நடிக்க மறுத்துவிட்டாராம். இதனால், மாஸ்டர் படம் இந்தியில் ரீமேக் செய்யப்படுவது கேள்விக்குறியாகியுள்ளது.

சல்மான் கானின் படங்கள் தொடர்ந்து தோல்வியடைந்து வருகின்றன. கடைசியாக வெளியான ‘ராதே’ படமும் பெரும் வெற்றியைப் பெறவில்லை. இதனாலேயே, சல்மான் கான் கதையை கவனமாக தேர்வு செய்ய முயல்வதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

banner

Related Stories

Related Stories