சினிமா

சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப் பதிவு: படப்பிடிப்புக்கு நீடிக்கும் சிக்கல் - நடந்தது என்ன?

கொரோனா விதிமுறைகளை மிறீயதால் டான் படக்குழு மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

சிவகார்த்திகேயனின் டான் படக்குழு மீது வழக்குப் பதிவு: படப்பிடிப்புக்கு நீடிக்கும் சிக்கல் - நடந்தது என்ன?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ்நாட்டில் கொரோனா விதிமுறைகளுக்கு உட்பட்டுப் பட பிடிப்புகளுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து முன்னணி நடிகர்களின் படப்பிடிப்பு வேலைகள் நடந்து வருகிறது.

இந்நிலையில், டான் படத்தில் நடித்து வரும் சிவகார்த்திகேயன் படப் பிடிப்பு பணிகள் கோவை மாவட்டம் பொள்ளாச்சியில் நடைபெற்றது. அப்போது கொரோனா விதிமீறலில் ஈடுபட்டதால் படக்குழுவிற்கு 19,400 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

அத்துடன் டான் படத்தின் இயக்குநர் சிபி சக்ரவர்த்தி உள்ளிட்ட 17 பேர் மீது போலிஸார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். பிரபல நடிகராக வலம் வரும் சிவகார்த்திகேயன் திரைப்பட படப்பிடிப்பில் விதிமீறல் நடந்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

டான் படத்தில் சிவகார்த்திகேயன், ப்ரியங்கா அருள் மோகன் நடிக்கிறார். உடன் எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி, சூரி, சிவாங்கி, பால சரவணன், ராமதாஸ், காளி வெங்கட், மிர்ச்சி விஜய் ஆகியோரும் நடித்து வருகின்றனர்.

banner

Related Stories

Related Stories