சினிமா

பொன்னியின் செல்வன் சூப்பர் அப்டேட்- யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்..? இணையத்தில் வைரலாகும் போட்டோ!

பொன்னியின் செல்வன் சூப்பர் அப்டேட்- யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்..? இணையத்தில் வைரலாகும் போட்டோ!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மணிரத்னம் இயக்கத்தில் கல்கியின் சரித்திர நாவலான ‘பொன்னியின் செல்வன்’ திரைப்படமாக உருவாகி வருகிறது. விக்ரம், ஐஸ்வர்யா ராய், ஜெயம் ரவி, கார்த்தி, அமலாபால், கீர்த்தி சுரேஷ், பார்த்திபன், ஐஸ்வர்யா லட்சுமி உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடிக்கின்றனர்.

ரூ.800 கோடி பட்ஜெட்டில் தயாராகும் இப்படத்தை இரண்டு பாகங்களாக வெளியிட உள்ளனர். பாண்டிசேரியில் இந்த படத்திற்கான ஷூட்டிங் வேலைகள் தீவிர்மாக நடைப்பெற்று வருகிறது. மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே இணைந்து நடித்துவரும் இந்த பிரம்மாண்ட படத்தில் பல முக்கிய கேரக்டர்கள் உள்ளது.

பொன்னியின் செல்வன் சூப்பர் அப்டேட்- யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்..? இணையத்தில் வைரலாகும் போட்டோ!
பொன்னியின் செல்வன் சூப்பர் அப்டேட்- யார் யாருக்கு என்ன கதாபாத்திரம்..? இணையத்தில் வைரலாகும் போட்டோ!

இதனால் யார் யார் எந்தெந்த கேரக்டர்களில் நடிக்கின்றனர் எனும் ஆவல் ரசிகர்களிடம் அதிகமாக இருந்து வந்த நிலையில் அது குறித்த தகவல் வெளியாகியுள்ளது.

அதன்படி, ஆதித்ய கரிகாலனாக விக்ரம், வந்தியத்தேவனாக கார்த்தி, அருள்மொழிவர்மனாக ஜெயம் ரவி, சுந்தரச்சோழனாக பிரகாஷ் ராஜ், நந்தினியாக ஐஸ்வர்யாராய், குந்தவியாக திரிஷா, பூங்குழலியாக ஐஸ்வர்யா லட்சுமியும் நடிக்கின்றனர். அதேபோல் பெரிய பழுவேட்டரையர் மற்றும் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் சரத்குமார் மற்றும் பார்த்திபன் நடித்துள்ளனர். ஆழ்வார்க்கடியான் நம்பியாக ஜெயராமும், கந்தன் மாறன் கதாபாத்திரத்தில் விக்ரம் பிரபுவும் நடித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

banner

Related Stories

Related Stories