சினிமா

விறு விறுவென ரெடியாகும் அந்தகன்; கோலிவுட்டுக்கு வரும் தெலுங்கு Music நிறுவனம் - சினி அப்டேட்ஸ்!

விறு விறுவென ரெடியாகும் அந்தகன்; கோலிவுட்டுக்கு வரும் தெலுங்கு Music நிறுவனம் - சினி அப்டேட்ஸ்!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. தொடங்கியது ‘அந்தகன்’ டப்பிங்

நீண்ட இடைவேளிக்கு பிறகு நடிகர் பிரஷாந்த் ரீஎண்ட்ரி கொடுக்கவிருக்கும் படம் ‘அந்தகன்’. பாலிவுட்டில் சூப்பர் ஹிட்டான ‘அந்தாதூன்’ படத்தின் தமிழ் ரீமேக்கான இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் சமீபத்தில் முடிவடைந்த நிலையில் தற்போது படத்தின் டப்பிங் பணிகளை துவங்கியுள்ளனர். முதற்கட்டமாக நடிகர் கார்த்திக் அவரின் டப்பிங் பகுதிகளை முடித்துக்கொண்டு வருகிறார். பிரஷாந்துடன் சிம்ரன், பிரியா ஆனந்த், வனிதா, இயக்குனர் கே.எஸ்.ரவிக்குமார், நவரச நாயகன் கார்த்திக் உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். விரைவில் இந்த படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

2. அடுத்தக்கட்டத்திற்கு தயாராகும் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’

ஆறு வருடங்களுக்கு பிறகு இயக்குனர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் உருவாகிவரும் படம் ‘ஆனந்தம் விளையாடும் வீடு’. நடிகர் கௌதம் கார்த்திக் முன்னணி கதாப்பாத்திரத்தில் நடிக்கும் இந்த படத்தில் அவருக்கு ஜோடியாக ஷிவாத்மிகா ராஜசேகர் நடித்து வருகிறார். மேலும் சரவணன், டேனியல் பாலஜி என பெரிய நட்சத்திர பட்டாளமே இதில் நடித்து வருகின்றனர். 40 நட்சத்திரங்கள் சேர்ந்து பிரம்மாண்டமாக உருவாகி வரும் இந்த படத்திற்கு சித்து குமார் இசையமைக்கிறார். திண்டுக்கல்லில் நடைப்பெற்று வந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் முழுமையாக முடிவடைந்ததை படக்குழு உற்சாகமாக பகிர்ந்துள்ளது.

அந்தகன் டப்பிங்கில் கார்த்திக்
அந்தகன் டப்பிங்கில் கார்த்திக்

3. லிங்குசாமியின் பைலிங்குவல் படத்தின் முதல்கட்ட வியாபாரம் முடிந்தது.

இயக்குனர் லிங்குசாமி இயக்கத்தில் தெலுங்கு நடிகர் ராம் பொத்தினேனி நடிப்பில் உருவாகிவரும் படம் ‘RAPO19’. தமிழ் - தெலுங்கு என இரு மொழிகளில் உருவாகும் இந்தப் படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாத்தில் தீவிரமாக நடைப்பெற்று வருகிறது. இதில் ராம் பொத்தினேனிக்கு ஜோடியாக இளம் நடிகை க்ரீத்தி ஷெட்டி நடிக்கிறார். தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்க இருக்கும் இந்த படத்தில் வில்லனாக ஆதி நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார்.

பல ப்ளாக்பஸ்டர் ஆல்பங்களை தந்த பிரபல இசையமைப்பாளர் தேவி ஸ்ரீ பிரசாத் இப்படத்திற்கு இசையமைப்பதால், பாடல்கள் மீதான எதிர்பார்ப்புகள் மிகப்பெரியதாக உள்ளது. இதனால் படத்தின் தமிழ் மற்றும் தெலுங்கு இசை உரிமையை, Aditya Music நிறுவனம் இப்போதே தனதாக்கியுள்ளது. தென்னிந்திய இசையுலகில் ஆதிக்கம் செலுத்தும் Aditya Music நிறுவனம், இப்படத்தின் இசை உரிமையை பெற்றிருப்பது படத்திற்கு மேலும் பலம் கூட்டியுள்ளது.

banner

Related Stories

Related Stories