சினிமா

பழங்குடிகளின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா? வெளியானது ஜெய் பீம் படத்தின் Exclusive Stills!

பழங்குடிகளின் உரிமைக்காக போராடும் வழக்கறிஞராக சூர்யா? வெளியானது ஜெய் பீம் படத்தின் Exclusive Stills!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட் உலகின் எவராலும் மறுக்க முடியாத உச்சத்தை அடைந்திருக்கிறார் நடிகர் சூர்யா. சூரரைப் போற்று படத்தின் மூலம் முந்தைய காலகட்டங்களில் நிகழ்ந்த சறுக்கல்களை சூர்யா சரி செய்ததோடு சமூகம் சார்ந்த பிரச்னைகளுக்கு தொடர்ந்து குரல் கொடுத்தும் வருவது சினிமாவுக்கு அப்பால் அவர் மீதான மதிப்பு மேன்மேலும் கூடிக் கொண்டே வருகிறது.

அதே வேளையில் தன்னுடைய படங்களிலும் சமூக நிகழ்வுகளை ஒட்டியே இருப்பதையையும் சூர்யா உறுதி செய்து வருகிறார். இந்நிலையில் அவரது 39வது படமாக உருவாகி வருகிறது ஜெய் பீம். அண்மையில் தனது பிறந்த நாளை முன்னிட்டு ஜெய் பீம் படத்தின் போஸ்டரை நடிகர் சூர்யாவே வெளியிட்டிருந்தார்.

தா.சே.ஞானவேல் இயக்கத்தில் உருவாகும் இந்த படத்தை சூர்யாவின் 2D நிறுவனமே தயாரிக்கிறது. இதில் ரஜிஷா விஜயன், மணிகண்டன் என பலர் ஜெய் பீம் படத்தில் நடிக்கின்றனர். மேலும் முதல் முறையாக சூர்யா வழக்கறிஞர் கதாப்பாத்திரத்தில் நடிக்கிறார்.

அதுமட்டுமல்லாமல் சென்னை உயர் நீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதியான சந்துரு வழக்கறிஞராக இருந்தபோது பழங்குடிப் பெண்ணுக்காக அவர் நடத்திய சட்டப் போராட்டத்தை கருவாக வைத்து சூர்யாவின் ஜெய் பீம் உருவாக்கப்படுகிறது எனவும் கோலிவுட் வட்டாரத்தில் தெரிவிக்கப்படுகிறது.

அதனை மெய்ப்பிக்கும் வகையில் ஜெய் பீம் படபிடிப்பு பணிகளின் போது ஓய்வுபெற்ற நீதிபதி சந்துரு நடிகர் சூர்யா இருக்கும் புகைப்படங்கள் இணையத்தில் வைரலாவதோடு வழக்கறிஞர் கெட்டப்பில் இருக்கும் சூர்யாவின் புகைப்படங்களும் வைரலாகி வருகிறது.

இதனையடுத்து படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது. சான் ரோல்டன் இந்த படத்துக்கு இசையமைக்க இருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் படம் குறித்த இன்னபிற அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories