சினிமா

வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் ; ரிலீசானது டைட்டில் லுக் - தயாரிப்பாளர் பெருமிதம்!

வீரத்தையும் வரலாற்றையும் சுமந்து நிற்கும் #வாடிவாசல் ; ரிலீசானது டைட்டில் லுக் - தயாரிப்பாளர் பெருமிதம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. அருள்நிதியின் ‘டைரி’ பட டீசர் வெளியானது..!

அடுத்தடுத்து சிறப்பான படங்களில் நடித்து கோலிவுட்டில் தனக்கான ரசிகர் வட்டத்தை உருவாக்கி வைத்திருக்கும் நடிகர் அருள்நிதி. அவரின் நடிப்பில் அடுத்ததாக உருவாகியிருக்கும் படம் ‘டைரி’. இந்த படத்தை அறிமுக இயக்குநர் இன்னிசை பாண்டியன் இயக்கிய்யுள்ளார். இவர் அருள்நிதியின் ‘டிமாண்டி காலனி’ படத்தை இயக்கிய அஜய் ஞானமுத்து மற்றும் அறிவழகன் ஆகியோரோடு உதவி இயக்குநராக பணியற்றியவர். இந்த ‘டைரி’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த பிப்ரவரி மாதம் வெளியாகிருந்தது, அதனை தொடர்ந்து படம் குறித்து எந்த அறிவிப்பும் வெளியாக நிலையில் தற்போது படத்தின் டீஸர் வெளியிடப்பட்டுள்ளது.

2. ஷங்கருடன் கூட்டணி அமைக்கும் கார்த்திக் சுப்பராஜ்..!

கார்த்திக் சுப்புராஜ் சமீபத்தில் தனுஷின் ‘ஜகமே தந்திரம்’ படத்தை இயக்கி இருந்தார். அடுத்ததாக விக்ரம் - துருவ் விக்ரம் சேர்ந்து நடிக்கும் ‘சியான் 60’ படத்தை இயக்கி வருகிறார். இந்தநிலையில் இயக்குனர் கார்த்திக் சுப்புராஜ் இயக்குனர் ஷங்கரோடு கூட்டணி அமைக்க இருப்பதாக ஒரு தகவல் வெளியாகியுள்ளது. இயக்குனர் ஷங்கர் அடுத்ததாக ராம்சரணை வைத்து இயக்க இருக்கும் தெலுங்கு படத்திற்கு கார்த்திக் சுப்புராஜ் தான் கதை எழுதி உள்ளார் என்றும் இது முழுக்க முழுக்க அரசியல் சார்ந்த கதை என்றும் கூறப்படுகிறது. விரைவில் இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

3. வாடிவாசல் திரைப்படத்தின் டைட்டில் லுக் ரிலீஸ்..!

நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படத்தைத் தொடர்ந்து அவரின் ரசிகர்கள் ஆவலாக எதிர்பார்க்கும் ஒரு படம் தான் ‘வாடிவாசல்’. வெற்றிமாறன் இயக்கும் இந்தப் படத்தின் ஷூட்டிங் ஓரளவுக்கு முடிந்திருக்க நிலையில் அடுத்தக்கட்ட படப்பிடிப்புக்காக படக்குழு காத்திருகிறது. கொரோனா இரண்டாம் அலை காரணமாக இந்த படத்தின் வேலைகளில் தோய்வு ஏற்பட்டது.

தற்போது உள்ள தகவலின்படி ‘வாடிவாசல்’ படத்தின் ஷூட்டிங்கை வரும் செப்டம்பர் முதல் துவங்க உள்ளது. இந்த நிலையில் படத்தின் டைட்டில் லுக் போஸ்டரை இன்று 5:30 மணியளவில் வெளியிட உள்ளனர். இது குறித்த அறிவிப்பை படத்தின் தயாரிப்பாளர் தாணு தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்..

banner

Related Stories

Related Stories