சினிமா

தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் அண்ணாத்த; மேற்கு வங்கம் சென்ற ரஜினி; மாறுகிறது தனுஷின் நானே வருவேன் டைட்டில்

தீபாவளி ரிலீஸுக்கு தயாராகும் அண்ணாத்த; மேற்கு வங்கம் சென்ற ரஜினி; மாறுகிறது தனுஷின் நானே வருவேன் டைட்டில்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

ஹைதராபாத்தில் முடிவுக்கு வந்த ‘எனிமி’ படப்பிடிப்பு..

ஆனந்த் சங்கர் இயக்கத்தில் தற்போது உருவாகிக் கொண்டிருக்கும் படம் ‘எனிமி’. இதில் நடிகர் ஆர்யா மற்றும் விஷால் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்கான தனது கால்ஷீட்டை முடித்துவிட்டு விஷால் அடுத்த படத்தின் பணிகளை கவணித்துக் கொண்டிருக்கிறார். தற்போது ஐதரபாத்தில் ஒரு பாடல் காட்சியும் சில பேட்ச்அப் காட்சிகளும் படமாக்கிய படக்குழு முழு படத்தின் ஷூட்டிங் வேலைகளும் முடிவடைந்து விட்டதாக அறிவித்துள்ளனர். இந்த படத்தின் போஸ்டர்கள் ஏற்கனவே வெளியாகி வைரலான நிலையில் படத்தின் டீஸர் விரைவில் வெளியாகவுள்ளது. கூடிய விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ தகவல்கள் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

செல்வராகவன் - தனுஷ் இணையும் படத்தின் தலைப்பு மாற்றப்பட்டதா?

செல்வராகவன் தனுஷ் கிட்டதட்ட 10 வருடங்கள் கழித்து மீண்டும் இணைந்து ஒரு படம் கொடுக்க உள்ளனர். வி கிரியேசன்ஸ் சார்பாக கலைபுலி தாணு தயாரிக்கவிருக்கும் இந்த படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்கவுள்ளார். ‘நானே வருவேன்’ என்று பெயரிடப்பட்டுள்ள இப்படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் ஏற்கனவே வெளியாகி வைரலானது.

தற்போது ‘நானே வருவேன்’ படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை செல்வா முடுத்துவிட்டதால் ஷூட்டிங்கை வரும் ஆகஸ்ட் 20ஆம் தேதி துவங்க படக்குழுத் திட்டமிட்டது, இந்த நிலையில் ‘நானே வருவேன்’ படத்தின் தலைப்பு மாற்றப்பட இருப்பதாக சமீபத்தில் தகவல்கள் கிடைத்த. இந்த படத்திற்கு ‘ராயன்’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

படப்பிடிப்பிற்காக மேற்கு வங்கம் செல்லும் ரஜினி...

ரஜினி தனது 168வது படத்திற்காக இயக்குனர் சிவா மற்றும் சன் பிக்சர்ஸ் உடன் கூட்டணி அமைத்துள்ளார். சிவா இயக்கத்தில் ரஜினியோடு சேர்ந்து நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, ஜாக்கி ஷெராஃப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகிவரும் இந்த படத்திற்கு அண்ணாத்த என தலைப்பு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு தீபாவளியை முன்னிட்டு 4.11.2021 அன்று திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. தற்போது இந்த படத்தின் இறுதிக்கட்ட ஷூட்டிங் பணிக்காக ரஜினி காந்த் மேற்கு வங்கம் சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இந்த ஷெட்யூலோடு அண்ணாத்த ஷூட்டிங் முழுவதும் முடிகிறது, அதனை தொடர்ந்து தனது டப்பிங் பணிகளை துவங்க ரஜினி திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories