சினிமா

ஆயுதபூஜைக்கு ரிலீஸ்? இறுதிகட்ட ஷூட்டிங்குக்கு தயாரான அஜித்.. அடுத்தடுத்து வலிமை அப்டேட்ஸ்! #ValimaiUpdate

‘வலிமை’ இறுதிக்கட்ட படப்பிற்காக விரைவில் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

ஆயுதபூஜைக்கு ரிலீஸ்? இறுதிகட்ட ஷூட்டிங்குக்கு தயாரான அஜித்.. அடுத்தடுத்து வலிமை அப்டேட்ஸ்! #ValimaiUpdate
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

சார்பட்டா பரம்பரை படத்தின் ட்ரெய்லர் வெளியாகி ட்ரெண்டாகி வருகிறது!

ரஜினியின் காலா படத்தை தொடர்ந்து ரஞ்சித் பிர்சா முண்டாவின் வாழ்க்கை வரலாற்றை படமாக்குவார் என பரவலாக பேசப்பட்டது. அதற்கான ப்ரீ ப்ரோடக்‌ஷன் வேலைகளும் துவங்கின. ஆனால் அதற்கு நிறைய நேரம் தேவைப்படுவதால் இடையில் வேறொரு படத்தை இயக்க தயாரானார். அது தான் ஆர்யா நடிப்பில் அடுத்து ரிலீஸுக்கு தயாராகிருக்கும் படம் ‘சார்பட்டா பரம்பரை’.

ஆர்யா, துஷாரா, கலையரசன், பசுபதி, சுந்தர், ஜான் விஜய், காளிவெங்கட் உள்ளிட்ட பலர் நடித்திருக்கும் இந்த படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைத்துள்ளார். இந்தப் படம் வரும் 22ஆம் தேதி அமேசான் ப்ரைம் வீடியோவில் வெளியாகவுள்ளது. வரலாற்றோடு தொடர்புடைய கதையாக உருவாகியுள்ள இந்தப் படத்தின் ட்ரெய்லர் தற்போது வெளியாகி இணையத்தில் வைரலாகியுள்ளது.

ஆயுதபூஜைக்கு ரிலீஸ்? இறுதிகட்ட ஷூட்டிங்குக்கு தயாரான அஜித்.. அடுத்தடுத்து வலிமை அப்டேட்ஸ்! #ValimaiUpdate

‘வலிமை’ இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடிக்க புறப்பட்ட அஜித்!

நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச்.வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்துக்கான மோஷன் போஸ்டர் & ஃபர்ஸ்ட் லுக் சமீபத்தில் வெளியாகி பெரியளவில் வைரலாகியுள்ளது.

இந்தப் படத்துக்கான 90% படப்பிடிப்பு முடிந்துள்ளது. இன்னும் ஒரு சண்டைக் காட்சி மட்டும் படமாக்க வேண்டியுள்ளது. இந்தக் காட்சியை படமாக்கத்தான் படக்குழு நீண்ட நாட்களாக காத்துக் கொண்டிருக்கிறது. இதற்காக விரைவில் கிழக்கு ஐரோப்பா நாடுகளில் 10 நாட்கள் படப்பிடிப்பு நடத்த படக்குழு திட்டமிட்டுள்ளது.

இந்தப் படப்பிடிப்பில் அஜித்தின் வில்லன் கார்த்திகேயாவும் இணையவுள்ளார். மேலும் படத்தை அக்டோபர் 14ஆம் தேதி ஆயுத பூஜைக்கு அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories