சினிமா

வலிமை ஷூட்டிங் படங்கள் லீக்கானதால் குதூகலத்தில் ரசிகர்கள்; இந்தியில் சாதித்த மிஸ் இந்தியா - சினி துளிகள்

வலிமை ஷூட்டிங் படங்கள் லீக்கானதால் குதூகலத்தில் ரசிகர்கள்; இந்தியில் சாதித்த மிஸ் இந்தியா - சினி துளிகள்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

1. இணையத்தில் வைரலாகும் ‘வலிமை’ ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள்.!

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான நடிகர் அஜித் நடிப்பில் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம்தான் வலிமை. இந்தப் படத்தின் மீது மிகப்பெரிய எதிர்ப்பார்ப்பு உள்ளது. அதுமட்டுமல்லாமல் நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியாகவிருந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் கொரோனா இரண்டாம் அலை காரணமாக தள்ளிவைக்கப்பட்டது. தற்போது ரசிகர்களின் மிகுந்த எதிர்ப்பார்ப்பில் இருக்கும் இந்த ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வரும் 15ஆம் தேதி வெளியாக இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது. இதனிடையே முதல் முறையாக வலிமை படத்தின் ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகியுள்ளது. கடந்த இரண்டு வருடங்களாக மிகவும் ரகசியமாக வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் பல விஷயங்கள் தற்போது இணையத்தில் லீக்காக துவங்கிவிட்டது. இதனால் ரசிகர்கள் உற்சாகமடைந்துள்ளனர்.

வலிமை ஷூட்டிங் படங்கள் லீக்கானதால் குதூகலத்தில் ரசிகர்கள்; இந்தியில் சாதித்த மிஸ் இந்தியா - சினி துளிகள்

2. இந்தியில் ‘மிஸ் இந்தியா’ படம் செய்த சாதனை!

தமிழ், தெலுங்கு, மலையாளம் என மூன்று மொழிகளிலும் முன்னணி நாயகியாக இருந்து வரும் நடிகை கீர்த்தி சுரேஷ் சோலோ ஹீரோயினாக நடித்து வெளியான ‘மிஸ் இந்தியா’ படம் டிஜிட்டல் தளத்தில் புதிய சாதனை படைத்துள்ளது. கொரோனா காரணமாக நெட்ஃபிளிக்ஸின் வெளியான ‘மிஸ் இந்தியா’ படத்திற்கு தென்னிந்தியாவில் எதிர்ப்பார்த்த வரவேற்பு கிடைக்கவில்லை, இந்த நிலையில் படத்தின் ஹிந்தி வெர்ஷனை சமீபத்தில் வெளியிட்டனர், அங்கு படத்திற்கு அமோக வரவேற்பு கிடைத்துள்ளது. வெளியான இரண்டே நாளில் இந்த படம் 2.6 கோடி பார்வைகளையும் 7.2 லட்சம் லைக்குகளையும் வாங்கி சாதனை படத்துள்ளது. மிஸ் இந்தியா படத்திற்கு பாலிவுட்டில் கிடைத்திருக்கும் இந்த வரவேற்பு படக்குழுவை உற்சாகமடையெ செய்துள்ளது.

3. அதர்வா 2-வது முறையாக இயக்குனர் சற்குணமுடன் கூட்டணி!

அதர்வா நடிப்பில் தற்போது குருதி ஆட்டம், தள்ளிப்போகாதே ஆகிய படங்கள் ரிலீஸுக்கு தயாராக உள்ளது. இதனை தொடர்ந்து தனது சூப்பர் ஹிட் பட இயக்குனரோடு மீண்டும் கூட்டணி அமைக்க அதர்வா திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. பாலா தயாரிப்பில் அதர்வா நடிப்பில் வெளியான படம் ‘சண்டிவீரன்’.

இயக்குனர் சற்குணம் இயக்கிருந்த இந்த படம் விமர்சன ரீதியாகவும் வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தது. இதனால் மீண்டும் சற்குணமுடன் கூட்டணி அமைத்து பெரிய ஹிட் கொடுக்க திட்டமிட்டுள்ளார். தற்போது குறைந்த பட்ஜெட் படங்களை தயாரிப்பதில் ஆர்வம் காட்டிவரும் லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது. விரைவில் இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories