சினிமா

மைக்செட் ஸ்ரீராம் கலக்கும் ‘ஹே சிங்காரி’... டென்மார்க் மக்களால் கொண்டாடப்பட்ட தமிழ் பாடல்! #CineUpdates

ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஏஜே என்பவர் இசையில் பிரபல யூட்யூபர் மைக்செட் ஸ்ரீராம் நடித்து ‘ஹே சிங்காரி’ எனும் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது.

மைக்செட் ஸ்ரீராம் கலக்கும் ‘ஹே சிங்காரி’... டென்மார்க் மக்களால் கொண்டாடப்பட்ட தமிழ் பாடல்! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

மைக்செட் ஸ்ரீராம் கலக்கும் ‘ஹே சிங்காரி’ ஆல்பம் பாடல்!

‘என்ஜாய் எஞ்சாமி’ பாடலைத் தொடர்ந்து தமிழில் வெளியாகும் ஆல்பம் பாடல்களின் மீது ரசிகர்களின் கவனம் அதிகரித்துள்ளது. இதனால் திரைப்பிரபலங்களும் இந்த ஆல்பம் பாடல்களில் நடிக்க அதிக ஆர்வம் காட்டி வருகின்றனர். சமீபத்தில் அஸ்வின், ரெபா மோனிகா இணைந்து நடித்திருந்த ‘குட்டி பட்டாஸ்’, கவின் தேஜூ நடித்து வந்த ‘அஸ்குமாரோ’ ஆகிய பாடல்கள் இணையத்தில் ட்ரெண்டாகின.

இது இண்டிபெண்டண்ட் இசையமைப்பாளர்களுக்கு மேலும் ஊக்கத்தை கொடுத்திருந்தது. இந்த நிலையில் ஏ.ஆர்.ரஹ்மானிடம் உதவி இயக்குனராகப் பணியாற்றிய ஏஜே என்பவர் இசையில் பிரபல யூட்யூபர் மைக்செட் ஸ்ரீராம் நடித்து ‘ஹே சிங்காரி’ எனும் ஆல்பம் பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை நடிகர் மற்றும் இசையமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் பாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

மைக்செட் ஸ்ரீராம் கலக்கும் ‘ஹே சிங்காரி’... டென்மார்க் மக்களால் கொண்டாடப்பட்ட தமிழ் பாடல்! #CineUpdates

டென்மார்க் மக்களால் கொண்டாடப்பட்ட தமிழ் பாடல்!

2007ஆம் ஆண்டு பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் மற்றும் ரஜினிகாந்த் கூட்டணியில் உருவான படம் ‘சிவாஜி’. வசூல் ரீதியாகவும் விமர்சன ரீதியாகவும் மிகப்பெரிய வெற்றியை பதிவு செய்திருந்த இந்தப் படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். ரஜினிகாந்த் ஜோடியாக ஸ்ரேயா நடித்த இந்தப் படத்தில் விவேக், மணிவண்ணன், சுமன், ரகுவரன் உள்ளிட்டோர் முக்கிய ரோலில் நடித்திருந்தனர்.

இதில் ரஜினியின் இண்ட்ரோ பாடலான ‘பல்லேலக்கா’ பாடலில் நயன்தாரா கேமியோ கொடுத்திருந்தார். அப்போதும் பெரும் வரவேற்பை பெற்றிருந்த இந்தப் பாடலை தற்போது டென்மார்க் மக்கள் கொண்டாடி வரும் வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

தமிழர்களின் பெருமையை உணர்த்தும் வகையில் நா.முத்துகுமார் எழுதிய வரிகளுக்கு ரஹ்மானின் ட்யூன் பெரும் பலம் கொடுத்திருந்தது. இந்தப் பாடலுக்கு டென்மார்க் மக்கள் நடனமாடிய வீடியோ ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியானது. இதனைப் பார்த்த ரஹ்மான் அதை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதனால் ரசிகர்கள் மத்தியில் இந்த வீடியோ மிகவும் வைரலாகி வருகிறது.

banner

Related Stories

Related Stories