சினிமா

ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? - தீயாய்ப் பரவும் தகவல்! #CineUpdates

ரஜினி அடுத்து யார் இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? - தீயாய்ப் பரவும் தகவல்! #CineUpdates
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

ரஜினியின் 169வது படத்தை இயக்கவிருக்கும் இளம் இயக்குநர்!

சிவா இயக்கத்தில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் தனது 168வது படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. ‘அண்ணாத்த’ என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்தில் ரஜினியோடு சேர்ந்து மீனா, குஷ்பு, நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், ஜாக்கி ஷெராப், ஜகபதி பாபு, பிரகாஷ் ராஜ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்து வருகின்றனர்.

வரும் தீபாவளிக்கு படம் திரைக்கு வர உள்ளது. இந்தப் படத்தை தொடர்ந்து ரஜினி யார் இயக்கத்தில் நடிப்பார் என்பதுதான் தற்போது கோலிவுட் ரசிகர்களின் எதிர்ப்பார்ப்பு.

கார்த்திக் சுப்புராஜ், தேசிங்கு பெரியசாமி என இருவரின் பெயர் இதில் அதிகமாக பேசப்படுகிறது, ஆனால், ரஜினி இவர்களில் தேசிங்கு பெரியசாமியை தான் தேர்வு செய்து வைத்திருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தேசிங்கு பெரியசாமியின் ‘கண்ணும் கண்ணும் கொள்ளையடித்தால்’ படத்தை பார்த்து வியந்த ரஜினி அப்போதே அவரை அழைத்து அடுத்த படத்திற்கான கமிட்மெண்ட் கொடுத்துவிட்டார் என்கிறது கோலிவுட் வட்டாரம். விரைவில் அறிவிப்பு வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

ரிலீஸுக்கு ஏழு படங்கள் வைத்திருக்கும் ஐஷ்வர்யா ராஜேஷ்!

ரஜினியின் 169வது படத்தை இயக்கப்போவது இவர்தானா? - தீயாய்ப் பரவும் தகவல்! #CineUpdates

தமிழ் சினிமாவில் பிஸியான நாயகியாக இருந்து வரும் ஐஷ்வர்யா ராஜேஷ். கடந்த ஆண்டு தெலுங்கில் விஜய் தேவர்கொண்டாவுடன் சேர்ந்து நடித்து தெலுங்கிலும் அறிமுகமானார். இவருக்கு தற்போது தெங்கிலும் தமிழிலும் ஏழு படங்கள் ரிலீஸுக்கு காத்திருக்கிறது.

தமிழில் பூமிகா, திட்டம் இரண்டு, ட்ரைவர், ஜமுனா, மோகன்தாஸ் ஆகிய படங்களும் தெலுங்கில் ரிப்பப்ளிக், டக் ஜகதீஷ், ஐயப்பனும் கோஷியும் தெலுங்கு ரீமேக் உள்ளிட்ட படங்கள் உள்ளன. இவைதவிர அல்லு அர்ஜூனின் புஷ்பா படத்திலும் இவருக்கு ஒரு முக்கிய கதாபாத்திரம் இருப்பதாக கூறப்படுகிறது.

banner

Related Stories

Related Stories