சினிமா

‘சூர்யா 40’ படத்தின் கதை முதல்.. பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா வரை : சினி அப்டேட்!

‘சூர்யா 40’ படத்தின் கதை பொள்ளாச்சி கொடூர சம்பவத்தை மையப்படுத்திய இருப்பதாக கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

‘சூர்யா 40’ படத்தின் கதை முதல்.. பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா வரை : சினி அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கார்த்தியின் ‘சர்தார்’ படத்தில் இணையும் சிம்ரன்!

கார்த்தி நடிப்பில் தற்போது உருவாகிவரும் படம் ‘சர்தார்’. விஷாலின் இரும்புத்திரை, சிவகார்த்திகேயனின் ஹீரோ ஆகிய படங்களை இயக்கிய பி.எஸ்.மித்ரன் இந்த படத்தை இயக்கி வருகிறார்.

கார்த்தியின் சுல்தான் படத்தை தொடர்ந்து அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ஃபர்ஸ்ட் லுக் வெளியாகி வைரலானது. அந்த ஃபர்ஸ்ட் லுக்கில் கார்த்தியின் லுக் ரொம்பவே வித்யாசமாக இருந்ததால் ரசிகர்கள் ஆச்சர்யத்தோடு அந்த போஸ்டரை ட்ரெண்டாக்கினர். இதில் கார்த்தி ஜோடியாக ராஷி கண்ணா மற்றும் ரஜிஷா விஜயன் நடிக்கின்றனர்.

கோரோனா காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள இந்த படத்தின் ஷூட்டிங் வேலைகள் விரைவில் துவங்கவுள்ளது. தற்போது இந்த படத்தில் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடிக்க 90களின் முன்னணி நடிகை சிம்ரன் ஓப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது. இதில் சிம்ரனுக்கு நெகட்டிவ் கேரக்டர் என பரவலாக சொல்லப்படுகிறது.

இதற்கு முன் சிம்ரன் நெகட்டிவ் கதாப்பாத்திரத்தில் நடித்த சீமராஜா படம் கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் சிம்ரனுக்கு நிறைய பாரட்டுகள் குவிந்திருந்தது. அதனால் இந்த படத்தின் மீதான் எதிர்ப்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளது.

‘சூர்யா 40’ படத்தின் கதை முதல்.. பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா வரை : சினி அப்டேட்!

‘சூர்யா 40’ படத்தின் கதை இந்த உண்மை நிகழ்வுகளை மையப்படுத்தியதா?

‘சூரரைப் போற்று’ படத்தை தொடர்ந்து சூர்யா நடிப்பில் அடுத்தடுத்து படங்கள் ரிலீஸுக்கு தயாராகி வருகிறது. இதில் சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் பாண்டிராஜ் இயக்கத்தில் உருவாகிவரும் ‘சூர்யா 40’ படமும் ஒன்று. சூர்யாவிற்கு ஜோடியாக பிரியங்கா மோகன் நடிக்கும் இந்த படத்தின் மீதமிருக்கும் ஷூட்டிங் வேலைகள் ஜூலையில் துவங்க உள்ளது.

இந்த நிலையில் ‘சூர்யா 40’ படம் குறித்த முக்கிய அப்டேட் ஒன்று கசிந்துள்ளது. இந்த படத்தின் கதை பெண்கள் பாதுகாப்பை மையப்படுத்தியது என்றும் முக்கியமாக பொள்ளாச்சியில் நடந்த கொடூர நிகழ்வுகளை மையப்படுத்திய சில காட்சிகள் இந்த படத்தில் இருப்பதாகவும் கோலிவுட்டில் பரவலாக பேசப்படுகிறது.

ஆனால், இது எந்த அளவிற்கு உண்மை என்பது தெளிவாகவில்லை, ஆனால் இப்படி ஒரு களத்தில் அந்த படம் உருவாகிறது என்றால் ரிலீஸுக்கு பிறகு மக்களிடையே நல்ல வரவேற்பை பெரும் என்பதில் சந்தேகமில்லை.

‘சூர்யா 40’ படத்தின் கதை முதல்.. பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா வரை : சினி அப்டேட்!

பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா?

கோலிவுட்டின் முன்னணி இயக்குனர்களில் ஒருவராக இருந்து வரும் அட்லீ பாலிவுட் முன்னணி நடிகர் ஷாருக்கானை இயக்கவிருப்பதாக இரண்டு ஆண்டுகளுக்கு முன் தகவல்கள் வெளியானது. இது தொடர்பாக பல தகவல்கள் இணையத்தில் வைரலானது, ஷாருக்கானோடு அட்லீ கூட்டணி அமைக்கவிருக்கும் படம் குறித்த தகவல் ஒன்று தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

இந்திய அளவில் இருக்கும் ரசிகர்கள் அனைவரும் விரும்பி பார்க்கும் விதமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் ஷாருக்கான் ஜோடியாக நடிக்க நயன்தாராவிடம் பேச்சுவார்த்தை நடந்து வருகிறது. ஆக்‌ஷன் படமாக உருவாகவிருக்கும் இந்த படத்தில் நயன்தாரா இணைந்தால் இது அவர் பாலிவுட்டில் அறிமுகமாகும் படமாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.

‘சூர்யா 40’ படத்தின் கதை முதல்.. பாலிவுட் சூப்பர் ஸ்டாருடன் இணையும் நயன்தாரா வரை : சினி அப்டேட்!

ஹைதராபாத்தில் துவங்கிய பிரபாஸின் ‘ராதே ஷ்யாம்’ படப்பிடிப்பு...

ராதா கிருஷ்ண குமார் இயக்கத்தில் பிரபாஸ் நடித்துக் கொண்டிருக்கும் படம் ‘ராதே ஷ்யாம்’. இதில் பிரபாஸ் ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்க இவர்களோடு சேர்ந்து ப்ரியதர்ஷி, முரளி ஷர்மானு பலரும் நடிக்கின்றனர். 1970களில் யூரோப்பில் நடக்கும் ஒரு காதல் கதையா உருவாகி வருகிறது.

கொரோனா லாக்டவுண் காரணமாக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த இந்த படத்தின் படப்பிடிப்பு வேலைகள் ஹைதராபாதில் தொடங்கியுள்ளது. வரும் வாரங்களில் படத்தின் மீதமிருக்கும் காட்சிகளையும், பிரபாஸ் - பூஜா ஹெக்டேவுக்கான பாடல் காட்சிகளையும் படமாக்க திட்டமிட்டுள்ளனர்.

ஜூலை மாதம் 30ம் தேதி ரிலீஸ் என அறிவிக்கப்பட்ட இந்த படத்தின் ரிலீஸ் தேதியும் ஒத்திவைக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்த ஷெட்யூல் ஷூட்டிங் முடிந்ததும் மாற்று ரிலீஸ் தேதி அறிவிக்கப்படவுள்ளது. விரைவில் அறிவிப்பு வெளியாகும் என டோலிவுட் வட்டாரத்தில் பரவலாக பேசப்படுகிறது.

banner

Related Stories

Related Stories