சினிமா

திரையரங்குகள் திறந்ததும் ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..? அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்! #ValimaiUpdate

‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ்நாட்டில் திரையரங்குள் திறந்ததும் வெளியாகும் என சொல்லப்படுகிறது.

திரையரங்குகள் திறந்ததும்
‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்..? அப்டேட்டால் குஷியான ரசிகர்கள்! #ValimaiUpdate
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரங்களில் ஒருவரான நடிகர் அஜித் நடிப்பில் இயக்குனர் ஹெச். வினோத் இயக்கத்தில் உருவாகி வரும் திரைப்படம் தான் ‘வலிமை’. இந்தப் படத்துக்கான எதிர்பார்ப்பு மிகப்பெரிய அளவில் உள்ளது.

ஆன்லைன் டிக்கெட் முன்பதிவு செய்யும் செயலியான ‘Book my show’-வில் இந்த படத்தை பார்க்க ஆர்வமாக இருப்பவர்களுக்கான கணக்கெடுப்பில் 2 லட்சம் பேருக்கு மேல் ஆர்வமோடு இருப்பதாக சமீபத்தில் சமூக வலைதள பக்கங்களில் செய்திகள் வைரலானது.

இதனை தொடர்ந்து இந்த படத்தின் அப்டேட் கேட்டுவந்த ரசிகர்களுக்கு படக்குழு எந்த அறிவிப்பையும் வெளியிடவில்லை, இந்த நிலையில் விரைவில் வலிமை படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகவிருப்பதாக செய்திகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

அதன்படி ‘வலிமை’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் தமிழ்நாட்டில் திரையரங்குள் திறந்ததும் வெளியாகும் என சொல்லப்படுகிறது, கூடவே வலிமை படத்தின் ரிலீஸ் தேதியும் அறிவிக்கப்படவுள்ளதாக கூறப்படுகிறது. ஜூலை இறுதி அல்லது ஆகஸ்ட் முதல் வாரத்தில் இந்த அப்டேட் கிடைக்கும் எனவும் எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories