சினிமா

ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம்... ஷூட்டிங்கில் பிஸியாகும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’!

சத்தமே இல்லாமல் நடிகை நயன்தாரா அடுத்தடுத்து ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளார்.

ஒரே நேரத்தில் ஆறு படங்களில் நடிக்க ஒப்பந்தம்... ஷூட்டிங்கில் பிஸியாகும் ‘லேடி சூப்பர்ஸ்டார்’!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமாவின் லேடி சூப்பர்ஸ்டாராக வலம் வந்துகொண்டிருக்கிறார் நடிகை நயன்தாரா. தற்போது, ரஜினியுடன் ‘அண்ணாத்த’ படத்திலும், விஜய்சேதுபதியுடன் விக்னேஷ்சிவன் இயக்கத்தில் ‘காத்துவாக்குல ரெண்டு காதல்’ படத்திலும் நடித்துவருகிறார். அதுமட்டுமில்லாமல், சோலோ நாயகியாக நடித்திருக்கும் ‘நெற்றிக்கண்’ படம் சோனி லிவ் ஓ.டி.டியில் பெரும் தொகைக்கு விற்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளன.

நயன்தாராவிற்கு அடுத்த ரிலீஸாக ‘நெற்றிக்கண்’ விரைவில் வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. இந்நிலையில், மூன்று தயாரிப்பு நிறுவனங்களுக்கு இரண்டு படங்கள் வீதம் ஆறு படங்கள் நடிக்க ஒரே நேரத்தில் இவர் ஒப்பந்தமாகியுள்ளதாக கூறப்படுகிறது.

முதலாவதாக, ட்ரீம் வாரியஸ் நிறுவனம் சார்பாக எஸ்.ஆர்.பிரபு தயாரிப்பில் இரண்டு படங்கள், இரண்டாவதாக, சிவப்பு மஞ்சள் பச்சை படத்தைத் தயாரித்த ரமேஷின் ‘அபிஷேக் பிலிம்ஸ்’ தயாரிப்பில் இரண்டு படங்கள், அடுத்து ஐசரி கணேஷ் தயாரிப்பில் இரண்டு படங்களும் நடிக்க ஒப்பந்தமாகியிருக்கிறார்.

இந்த ஆறு படங்கள் மட்டுமல்லாமல், மலையாளத்தில் ஃபகத்தோடு இணைந்து ‘பாட்டு’ எனும் படமும், தெலுங்கில் ஒரு படமும் இவர் நடிப்பில் உருவாகிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories