சினிமா

வைரலாகும் தனுஷின் ஹாலிவுட் பட வீடியோ... 'அவதார்' நடிகரின் கிரைம் த்ரில்லர்... சினி அப்டேட்ஸ்!

நடிகர் தனுஷ் நடித்து வரும் ஹாலிவுட் படத்தின் வீடியோ காட்சி வெளியாகி இணையத்தில் வைரலாகிவருகிறது.

வைரலாகும் தனுஷின் ஹாலிவுட் பட வீடியோ... 'அவதார்' நடிகரின் கிரைம் த்ரில்லர்... சினி அப்டேட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

நடிகர் தனுஷ் நடிப்பில் இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில் நெட்ஃபிளிக்ஸில் வெளியான திரைப்படம் ‘ஜகமே தந்திரம்’. கலவையான விமர்சனங்களை சந்தித்து வரும் இந்த படத்திற்கு தனுஷ் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பு கிடைத்து வருகிறது. 19 நாடுகளில் 190 மொழிகளில் வெளியான இந்தப் படத்தைத் தொடர்ந்து தனுஷ் தனது 43வது படத்துக்கான வேலைகளில் தீவிரம் காட்டி வருகிறார்.

இதனிடையே தனுஷ் நடித்து முடித்துள்ள ஹாலிவுட் படமான ‘தி க்ரே மேன்’ படத்தின் படப்பிடிப்பு தளத்தில் இருந்து சில வீடியோக்கள் வெளியாகி இணையத்தில் வைரலாகி வருகிறது. அவெஞ்சர்ஸ் பட இயக்குனர் ரூசோ ப்ரதர்ஸ் இயக்கிவரும் இந்த பிரம்மாண்ட படத்தில் கிரிஸ் எவன்ஸ், ரியான் கோஸ்லின் ஆகியோருடன் சேர்ந்து தனுஷ் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். விரைவில் இந்தப் படத்தின் ரிலீஸ் குறித்த தகவல் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

அவதார் பட நடிகர் நடிக்கவிருக்கும் க்ரைம் த்ரில்லர் 'Transfusion'

ஜேம்ஸ் கேமரூனின் அவதார் படம் மூலமாக உலகளவில் பிரபலமான நடிகர் தான் சாம் வொர்திங்டன் (Sam Worthington). தொடர்ந்து இவரின் நடிப்பில் வெளியான Clash of the Titans, Wrath of the Titans, Everest, The Titan ஆகிய படங்கள் பிரம்மாண்ட வெற்றியை பதிவு செய்திருந்தன.

வைரலாகும் தனுஷின் ஹாலிவுட் பட வீடியோ... 'அவதார்' நடிகரின் கிரைம் த்ரில்லர்... சினி அப்டேட்ஸ்!

தற்போது ‘அவதார் 2’ படத்தில் நடித்து முடித்துவிட்டு ‘அவதார் 3’ படத்தில் தீவிரமாக நடித்து வரும் இவர் அடுத்து ஒரு க்ரைம் த்ரில்லர் படத்தில் நடிக்க ஒப்பந்தமாகியுள்ளார். நடிகர் மற்றும் எழுத்தாளரான Matt Nable இந்த படம் மூலம் இயக்குனராக அறிமுகமாகிறார். 'Transfusion' என தலைப்பு வைக்கப்பட்டுள்ள இந்தப் படத்திற்கான ஷூட்டிங் வேலைகளை ஆஸ்திரேலியாவில் உள்ள சிட்னியில் துவங்க திட்டமிட்டுள்ளனர்.

banner

Related Stories

Related Stories