சினிமா

தனுஷின் கிரே மேன் படத்தில் இணைந்த மற்றொரு இந்திய பிரபலம்; 

தனுஷின் கிரே மேன் படத்தில் இணைந்த மற்றொரு இந்திய பிரபலம்; 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட் சினிமா தொடங்கி இந்திய சினிமா முழுக்க பிரபலமாக இருக்கும் நடிகர்தான் தனுஷ். ரெண்டு தேசிய விருது பெற்றிருக்கும் இவர் ஹாலிவுட் இண்டஸ்ரியையும் விட்டு வைக்கவில்லை.

ஏற்கனவே ‘தி எக்ஸ்ட்ராடினரி ஜர்னி ஆப் பக்கீர்’ படத்துல நடித்திருந்தார். இப்போது ‘தி க்ரே மேன்’ படத்தில் நடித்து வருகிறார். ரோசோ ப்ரதர்ஸ் இயக்கி வரும் இந்தப் படத்துக்கான ஷூட்டிங் இப்போ நடந்து வருகிறது.

அந்த படப்பிடிப்பு தளத்துல இருந்து வெளியான சில போட்டோக்கள் கூட சமீபத்தில் வைரலாயது. இந்தப் படத்தில் தனுஷுடன் சேர்ந்து ஹாலிவுட் நடிகர்கள் கிரிஸ் ஈவன்ஸ் மற்றும் ரயன் காஸ்லிங் நடித்து வருகிறார்கள்.

தனுஷின் கிரே மேன் படத்தில் இணைந்த மற்றொரு இந்திய பிரபலம்; 

இப்போது இந்தப் படத்துல இன்னொரு இந்திய நட்சத்திரம் இணைந்திருப்பதாக தகவல் கிடைத்திருக்கிறது. மராத்திய நடிகையான ஐஸ்வர்யா சோனார் இந்தப் படத்துக்கான ஆடிஷனில் கலந்துகொண்டு தேர்வும் ஆகியிருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்த படத்துக்காக ஆறு மாசம் நடந்த ஆக்டிங் பயிற்சியிலும் இவர் கலந்துகொண்டாராம், கூடிய சீக்கிரமே ஐஸ்வர்யா சோனாரும் தி க்ரே மேன் ஷூட்டிங்கில் இணைவார் என எதிர்ப்பார்க்கப்படுது. இந்தப் படத்தின் ஷூட்டிங் இப்போது விறுவிறுப்பாக நடந்து வருகிறது.

banner

Related Stories

Related Stories