சினிமா

வில்லனாகும் செல்வராகவன் ? விஜய் 65 தள்ளிப்போவதால்  ரிலீஸுக்கு தயாராகிறதா கமலின் விக்ரம்? சமீபத்திய தகவல்

 வில்லனாகும் செல்வராகவன் ? விஜய் 65 தள்ளிப்போவதால்  ரிலீஸுக்கு தயாராகிறதா கமலின் விக்ரம்? சமீபத்திய தகவல்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

லோகேஷ் கனகார்ஜ் இயக்கத்தில் வெளியான மாஸ்டர் படத்தின் ஹிட்டைத் தொடர்ந்து விஜய் தன்னோட 65வது படத்திற்காக டைரக்டர் நெல்சன் திலிப்குமாருடன் கூட்டணி அமைத்திருக்கிறார். இந்த படத்தை சன் பிக்ச்சர்ஸ் நிறுவனம் பிரம்மாண்டமாக தயாரித்து வருகிறார்கள்.

முதற்கட்ட ஷூட்டிங் ஜார்ஜியாவில் நடந்து முடிந்திருக்கும் நிலையில் அடுத்தக்கட்ட ஷூட்டிங்கிற்காக சென்னையில் ஒரு பெரிய மால் செட் அமைத்து வந்தார்கள், படத்தின் பெரும்பாலான காட்சிகள் மாலில்தான் படமாக்க இருக்கிறார்களாம்.

 வில்லனாகும் செல்வராகவன் ? விஜய் 65 தள்ளிப்போவதால்  ரிலீஸுக்கு தயாராகிறதா கமலின் விக்ரம்? சமீபத்திய தகவல்

அதனால் இந்த செட்டுக்கு நிறைய செலவு செய்கிறது சன் பிக்ச்சர்ஸ். இந்தக் கொரோனா இரண்டாவது அலை தீவிரம் காரணமாக, தற்போது அந்த செட் போடும் வேலையும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. இதனால் 2022 பொங்கலுக்கு ரிலீஸாகும் என அறிவிக்கப்பட்டிருக்கும் இந்தப் படத்தின் ரிலீஸ் தள்ளிப்போக வாய்ப்பிருப்பதாக கோலிவுட் வட்டாரத்தில் பேசப்படுகிறது,

விஜய் படம் தள்ளிப்போனால் அந்த ரிலீஸ் தேதியில் கமல் தன்னோட ‘விக்ரம்’ படத்தை ரிலீஸ் பண்ண ஸ்கெட்ச் போட்டு வருவதாக சொல்லப்படுகிறது. விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டே நடிக்கும் விஜய் 65 படத்துல் யோகி பாபு, புகழ், ராமசந்திரா ராஜூ உள்ளிட்ட பலர் நடித்து வருகிறார்கள்.

இதில் விஜய்க்கு வில்லனாக இயக்குனர் செல்வராகவன் நடிக்கப் போவதாகவும் தகவல்கள் சமீபத்தில் வெளியானது. இது சம்மந்தமான அதிகாரப்பூர்வ அறிவிப்பு சீக்கிரமே வெளியாகும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories