சினிமா

ஜெய் நடித்த 'குற்றம் குற்றமே' திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸ்? : படக்குழு அதிரடி முடிவு!

சுசீந்திரன் இயக்கத்தில் ஜெய் நடித்த குற்றம் குற்றமே படத்தை நேரடியாக ஓ.டி.டியில் வெளியிட திட்டமிடப்பட்டுள்ளது.

ஜெய் நடித்த 'குற்றம் குற்றமே' திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸ்? : படக்குழு அதிரடி முடிவு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சுசீந்திரன் இயக்கதில் சிம்பு நடித்த `ஈஸ்வரன்' படம் பொங்கலுக்கு வெளியானது. இந்தப் படம் முழுக்க முழுக்க ஊரடங்கு காலத்தில் படமாக்கப்பட்டது. இந்தப் படத்துக்கு முன்னால் ஜெய் நடிப்பில் ஒரு படத்தை இயக்கினார் சுசீந்திரன். அந்தப் படத்தைப் பரபரப்பாகவும், குறுகிய காலத்துக்குள்ளும் முடிச்சுக் கொடுத்தார். அதைக் கேள்விப்பட்ட சிம்பு, சுசீந்திரனை அழைத்துப் பேசினார். அதற்குப் பிறகுதான் ஈஸ்வரன் கதையை சிம்புவிடம் சொல்லி அந்தப் படமே துவங்கியது.

ஈஸ்வரனுக்கு முன்னால் சுசீந்திரன் - ஜெய் காம்போவில் உருவான படம் ஓ.டி.டியில் நேரடியாக வெளியாகும் என்கிற தகவல்கள் சில மாதங்களாகவே உலவிக் கொண்டிருக்கிறது. காரணம் இப்போது இருக்கும் சூழ்நிலையை பார்த்தால் தியேட்டர்கள் எப்போது திறக்கப்படும் என்பதை யாராலும் கணிக்க முடியவில்லை. அதனால், இந்தப் படத்தை ஓடிடியில் ரிலீஸ் செய்ய இருப்பதாக சொல்லப்படுகிறது.

இந்தப் படத்துக்கு `குற்றம் குற்றமே' எனப் பெயரிடப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. இந்தப் படம் ZEE5-ல் ரிலீஸ் ஆக இருக்கிறது என சொல்லப்படுகிறது. இந்தப் படத்தில் ஜெய்யுடன், பாரதிராஜா, ஹரீஷ் உத்தமன், ஸ்ம்ரிதி வெங்கட், திவ்யா துரைசாமி, காளி வெங்கட், பாலசரவணன் என நிறைய பேர் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்துக்கு வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

ஜெய் நடித்த 'குற்றம் குற்றமே' திரைப்படம் நேரடியாக OTT-ல் ரிலீஸ்? : படக்குழு அதிரடி முடிவு!

இதுபோக சுசீந்திரன் ஜெய் கூட்டணியில் இன்னொரு படமும் உருவானது. `சிவ சிவா' என டைட்டில் வைக்கப்பட்டிருக்கும் அந்தப் படம் ஜெய்யின் 30வது படம். தமிழில் ஜெய்யும் தெலுங்கில் ஆதியும் நடித்து பைலிங்குவல் படமாக உருவாகியிருக்கிறது. இந்த இரண்டு படங்களின் வெளியீடு பற்றியும் அதிகாரப்பூர்வ தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories