சினிமா

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீர்த்த கர்ணன் படக்குழு; பிறந்த நாளில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர் நவீன்!

ரசிகர்களின் எதிர்பார்ப்பை தீர்த்த கர்ணன் படக்குழு; பிறந்த நாளில் உண்மையை போட்டுடைத்த இயக்குநர் நவீன்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான படம் `கர்ணன்'. இதில் லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்டி ஆகியோர் முக்கிய கதா பாத்திரத்தில் நடித்துள்ளனர். ஏப்ரல் 9ம் தேதி வெளியான இந்த படம் மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெற்றது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பாலும், மாரி செல்வராஜூடன் பணியாற்றிய அனுபவத்தாலும், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார் தனுஷ். இவ்வளவுக்கும் காரணம் கர்ணனின் வெற்றி. இப்போது இந்தப் படம் அமேஸான் ப்ரைமில் வெளியாகி இன்னும் பல பார்வையாளர்களைப் பெற்றிருக்கிறது.

கர்ணன் படம் வெளியான நாளில் இருந்து ரசிகர்கள் அதிகமாக கேட்டது, இந்தப் படத்தின் பின்னணி இசைக் கோர்வை எப்போது வெளியாகும் என்பதைத் தான். அதற்கு இசையமைப்பாளர் சந்தோஷும் சீக்கிரம் வரும் என பதில் சொல்லி வந்தார். அதன்படி மே 14, அதாவது நேற்று மாலை இந்தப் படத்தின் முழு OSTயும் வெளியிடப்பட்டிருக்கிறது.

மூடர் கூடம் என்ற தனது முதல் படத்தின் மூலமே மிகப்பெரிய கவனம் ஈர்த்தவர் இயக்குநர் நவீன். அதற்குப் பிற்கு `அலாவுதீனும் அற்புத கேமிராவும்' படத்தை இயக்கினார். அந்தப் படம் இதுவரை வெளியாகவில்லை.

அதனைத் தொடர்ந்து விஜய் ஆண்டனி - அருண் விஜய் நடிப்பில் `அக்கினி சிறகுகள்' படத்தை இயக்கினார். நேற்று நவீனின் பிறந்தநாள் என்பதால் பலரும் அவருக்கு வாழ்த்துகள் தெரிவித்தனர். அப்படி ஸ்டுடியோ க்ரீன் நிறுவனமும் தனது வாழ்த்தை நவீனுக்கு ட்விட்டரில் தெவித்திருந்தது. அதில் `அக்கினி சிறகுகள்' படத்திற்குப் பிறகு இரண்டு படங்கள் நவீனுடன் இணைந்து பணியாற்ற இருக்கிறோம் என அறிவித்திவிருந்தார்கள்.

இதனை நவீனும் தன்னுடைய ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்து உறுதிபடுத்தியிருக்கிறார். இது பற்றி நவீன் செய்திருக்கும் ட்வீட்டில், ”எனக்கு கதை சொல்ல வராது என்பதை உணர்ந்து, கதை கேட்காமல், என்னை நம்பி கமிட் செய்த தயாரிப்பாளர் ஞானவேல்ராஜா அவர்களுக்கு நன்றி" என குறிப்பிட்டிருந்தார். இந்த இரண்டு படங்களிலும் நடிக்க இருப்பது யார், எப்போது இந்தப் படம் துவங்க இருக்கிறது போன்ற தகவல்கள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories