சினிமா

தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்.கே.செல்வமணி தகவல்!

நடிகர் அஜித் திரைப்பட தொழிலாளர்களுக்காக 10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்.கே.செல்வமணி தகவல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

சினிமா படபிடிப்பு தொடர்பாக தென்னிந்திய திரைப்படத் தொழிலாளர் சம்மேளனத்தின் தலைவர் ஆர்.கே.செல்வமணி செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசியவர், தமிழகத்தில் கொரனோவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் முதல்வரை சந்தித்து 3 கோரிக்கைகளை விடுத்திருந்தோம்.

அதில் படபிடிப்பு நடத்தக்கோரியும், தமிழ்நாடு திரைப்பட உரிமையளர்களுக்கு 2 ஆயிரம் வழங்க கோரியும் மற்றும் திரைப்பட தொழிலாளர்கள் தடுப்பூசி செலுத்த தனியாக மையம் அமைக்க கோரியும் வேண்டுகோள் விடுத்ததாகவும் தெரிவித்தார்.

ஆனால் தற்போது கொரனோவின் தாக்கம் அதிகரித்துள்ள நிலையில் படபிடிப்பு நடத்தக்கோரி அளித்த கோரிக்கையை திரும்ப பெறுவதாகவும், தற்போது உள்ள நிலையில் மே 31ம் தேதி வரை படபிடிப்பி ஈடுபடவில்லை என்றார்.

தமிழ் சினிமா தொழிலாளர்களுக்கு நடிகர் அஜித் ரூ.10 லட்சம் நிதியுதவி - ஆர்.கே.செல்வமணி தகவல்!

சின்னத்திரை மற்றும் வெள்ளித்திரை என எந்த நிகழ்விலும் திரைப்பட துறையினர், தொழில்நுட்ப கலைஞர்கள் ஈடுபடபோவதில்லை என்றார். அதன்பிறகு நிலைமையை கருதி முடிவு எடுக்கபடும் என்றார். எனவே முதல்வரிடம் அளித்த மற்ற 2 கோரிக்கைகளை நிறைவேற்றி தர வேண்டுகொள் விடுத்தார்.

நடிகர், நடிகைகள் மற்றும் திரைப்பட தயாரிப்பாளர்கள், தன்னார்வல தொண்டு நிறுவனங்கள் நலிந்த திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவி செய்ய முன்வர வேண்டும் என்றார்.

இந்தியன் 2 விபத்திற்கு பிறகு திரைப்பட தொழிலாளர்களுக்கு இன்சூரன்ஸ் முக்கியமானது என்றாலும் அது அனைத்து தொழிலாளர்களுக்கும் கிடைக்கவில்லை. நடிகர் அஜித் திரைப்பட தொழிலாளர்களுக்காக ரூ.10 லட்சம் நிதியுதவி வழங்கியுள்ளதாக ஆர்.கே.செல்வமணி தெரிவித்தார்.

அதேபோல திரைப்பட தொழிலாளர்களுக்கு உதவுவதற்காக ரூ.10 கோடியிலான திட்டத்தினை இயக்குநர் மணி ரத்னம் வகுத்துள்ளார். அதன்படி மாதந்தோறும் ரூ.1500 பணியாளர்களின் வங்கிக் கணக்கில் செலுத்தப்பட்டு வருவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

banner

Related Stories

Related Stories