சினிமா

ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’; மகிழ்ச்சியில் படக்குழு!

ஷாங்காய் திரைப்பட விழாவில் நடிகர் சூர்யாவின் ‘சூரரைப் போற்று’ படம் திரையிடப்பட இருக்கிறது.

ஷாங்காய் திரைப்பட விழாவில் ‘சூரரைப் போற்று’; மகிழ்ச்சியில் படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கோலிவுட்டின் முன்னணி நடிகர்கள்ல ஒருவராக இருந்தும், கொஞ்ச காலமாக ஒரு நல்ல ஹிட் படத்துக்காக காத்துக் கொண்டிருந்த நடிகர்தான் சூர்யா. தொடர்ச்சியாக இவரோட நடிப்பில் வெளியான படங்கள் எல்லாம் ரசிகர்களுக்கு ஏமாற்றத்தைக் கொடுத்திருந்தாலும் கடைசியாக வெளியான 'சூரரைப் போற்று' வெற்றிபெற்றது. ஓடிடில ரிலீஸாக இருந்தாலும் படத்திற்கு நல்ல ரெஸ்பான்ஸ் கிடைத்தது.

சுதா கொங்கரா இயக்கத்தில் வெளியான இந்தப் படம் ஆஸ்கர் பரிந்துரைக்கு போனது, அங்கே ஃபைனல் நாமினேஷனில் வெளியேறிவிட்டது. உண்மை சம்பவத்தை அடிப்படையாக வைத்து சுதாவின் நேர்த்தியான மேக்கிங்கில் வெளியான இந்த படம் சூர்யாவோட சினிமா கேரியரையே திருப்பிப்போட்ட படமாக அமைந்தது. சூர்யாவோடு சேர்ந்து இந்த படத்தில் அபர்ணா பாலமுரளி, ஊர்வசி, மோகன் பாபு, காளி வெங்கட் உள்ளிட்ட பலர் முக்கிய கேரக்டர்ல நடித்திருந்தனர்.

பலருடைய பாராட்டுகளைப் பெற்ற இந்த படம் இப்போது 2021ம் ஆண்டுக்கான ஷாங்காய் இண்டர்னேஷ்னல் ஃபிலிம் ஃபெஸ்டிவலில், திரையிடப்பட இருக்கிறது. வர ஜூன் 11ல இருந்து 20ஆம் தேதி வரை நடக்க இருக்கும் இந்த விழாவில் சூரரைப் போற்று படத்துக்கு விருது எதுவும் கிடைக்குமா என பொருத்திருந்து பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories