சினிமா

தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்; காஜலுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் பவர் - சினி பைட்ஸ்

தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்; காஜலுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் பவர் - சினி பைட்ஸ்
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள். அண்மையில் வெளியான இந்தப் படத்துக்கு ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இந்தப் படத்திற்கு கிடைத்த வரவேற்பாலும், மாரி செல்வராஜூடன் பணியாற்றிய அனுபவத்தாலும், மீண்டும் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிப்பதாக அறிவித்திருந்தார் தனுஷ். இவ்வளவுக்கும் காரணம் கர்ணனின் வெற்றி.

இப்போது இந்த வெற்றிப் படம் தெலுங்கு மொழியில் ரீமேக் ஆக இருக்கிறது என சொல்லப்படுகிறது. கர்ணன் படத்தின் தெலுங்கு உரிமையை பெல்லம் கொண்டா சுரேஷ் வாங்கியிருக்கிறார். அவருடைய மகனும், தெலுங்கு நடிகருமான பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ் நாயகனா நடிக்கிறார்.

ஏற்கெனவே பெல்லம் கொண்டா ஸ்ரீநிவாஸ், தமிழில் வெற்றி பெற்ற `ராட்சசன்' படத்தின் தெலுங்கு ரீமேக்கான, `ராட்சசடு' படத்தில் நடித்தார். இப்போது இரண்டாவது முறையாக தமிழ்ப் படத்தை ரீமேக் செய்ய இருக்கிறார் எனக் கூறப்படுகிறது. மேலும் தனுஷ் நடித்த அசுரன் படமும் தெலுங்கில் வெங்கடேஷ் நடிப்பில் உருவாகியிருக்கிறது. இப்போது அடுத்தடுது அவரின் படம் தெலுங்கில் ரீமேக் ஆவது குறிப்பிடத்தக்கது. மேலும் கர்ணன் படம், மே 9ஆம் தேதி அமேஸான் ப்ரைமில் வெளியாக இருக்கிறது.

தமிழில் யாமிருக்க பயமே படம் மூலம் இயக்குநராக அறிமுகமானவர் இயக்குநர் டிகே. பிறகு ஜீவா நடித்த கவலை வேண்டாம் படத்தை இயக்கினார். அந்தப் படம் பெரிய வெற்றியடையவில்லை. அதன் பின் இயக்கிய `காட்டேரி' இன்னும் வெளியாகவில்லை. இந்த நிலையில் டிகே இயக்கும் அடுத்த படம் பற்றிய தகவல் வெளியாகி இருக்கிறது. இந்தப் படத்தில் காஜல் அகர்வால், ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஜனனி ஆகியோர் இணைந்து நடித்திருக்கிறார்கள்.

தெலுங்கில் ரீமேக்காகும் கர்ணன்; காஜலுக்கு கிடைக்கப் போகும் சூப்பர் பவர் - சினி பைட்ஸ்

இன்னும் பெயரிடப்படாத இந்தப் படத்தின் ஷூட்டிங் நிறைவடைந்து இப்போது படத்திற்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் துவங்கியிருக்கிறது. டிகேவின் யாமிருக்க பயமே, காட்டேரி படம் போல இதுவும் ஒரு ஹாரர் படமாக உருவாகிடிருக்கிறது. காஜல் அகர்வால், ரெஜினா கசன்ட்ரா, ரைசா வில்சன், ஜனனி என ஆகியோருடன் ஐந்தாவதாக Noyrika என்ற இரான் ஹீரோயினும் படத்தில் இருக்கிறார்.

படத்தில் ஒவ்வொரு நடிகைக்கும் ஒவ்வொரு குணம் இருக்கும், உதாரணமாக காஜலுக்கு சூகாஜ்ப்பர் பவர் ஒன்று இருக்கும், ரைசாவுக்கு சொன்னதெல்லாம் பலிக்கும் கருநாக்கு. இது போல படம் முழுக்க நிறைய சுவாரஸ்யங்கள் இருக்கும் எனக் கூறியிருக்கிறார் இயக்குநர். மேலும் இந்தப் படத்தின் தலைப்பும் ஃபர்ஸ்ட்லுக்கும் சீக்கிரமே வெளியாகும் எனக் கூறியிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories