சினிமா

கர்ணன் வெற்றி: மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி - தனுஷ் அறிவிப்பு !

கர்ணன் வெற்றி: மீண்டும் மாரி செல்வராஜுடன் கூட்டணி - தனுஷ் அறிவிப்பு !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவான படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்திருந்தார்கள். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருந்த இந்தப் படத்தை சந்தோஷ் நாராயணன் இசையமத்திருந்தார். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்தார். இந்தப் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெற்றது.

கூடவே இந்தப் படத்தின் மூலம் தனுஷின் குட்புக்கிலும் இடம்பிடித்தார் மாரி செல்வராஜ். இப்போது மீண்டும் தனுஷ் - மாரி செல்வராஜ் கூட்டணி இணைய இருக்கிறது என்பதை அறிவித்திருக்கிறார் தனுஷ்.

இது குறித்த ட்வீட்டில் தனுஷ் "கர்ணன் படத்தின் ப்ளாக்பஸ்டர் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜூம் - நானும் மீண்டும் இணைகிறோம் என்பதை உற்சாகமாக அறிவிக்கிறேன். இதன் ப்ரீ ப்ரொடக்ஷன் வேலைகள் நடந்து வருகிறது. அடுத்த வருடம் ஷூட் துவங்க இருக்கிறது" எனக் குறிப்பிட்டிருந்தார்.

தற்போது மாரி செல்வராஜ் இயக்கத்தில் துருவ் விக்ரம் நடிப்பில் ஒரு படம் உருவாக இருக்கிறது. தனுஷ் `க்ரேமேன்' ஷூட்டிங்கில் இருக்கிறார். இதனைத் தொடர்ந்து கார்த்திக் நரேன் படம், தனுஷின் 44வது படம், இதை மித்ரன் ஜவகர் இயக்குவதாக சொல்லப்படுகிறது, செல்வராகவனின் `நானே வருவேன்', ராம்குமார் இயக்கத்தில் ஒரு படம் என கைவசம் பல படங்களை வைத்திருக்கிறார்.

கூடவே பாலாஜி மோகன் இயக்கத்தில் ஒரு படம் நடிப்பதாகவும் சொல்லப்படுகிறது. தவிர தனுஷ் இயக்கத்தில் இரண்டாவதாக உருவாகிக் கொண்டிருந்த ஒரு படமும் பாதியில் நிற்கிறது. இவ்வளவு கமிட்மென்ட்களுக்கு நடுவில் எப்போது மாரிசெல்வராஜ் படம் நடக்க இருக்கிறது என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.

banner

Related Stories

Related Stories