சினிமா

வட சென்னையில் மிஸ் ஆனது விடுதலையில் கிட்டியது; சொன்னதை செய்த விஜய் சேதுபதி!

வட சென்னையில் மிஸ் ஆனது விடுதலையில் கிட்டியது; சொன்னதை செய்த விஜய் சேதுபதி!
DELL
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

வெற்றிமாறன் இயக்கத்தில் வெளியான `அசுரன்' மிகப்பெரிய ஹிட்டானது. இதற்கடுத்ததாக சூரி ஹீரோவாக நடிக்கும் படத்தை எடுக்கப் போவதாக அறிவித்தார். அந்தப் படத்தை எல்ரெட் குமார் தயாரிப்பதாகவும் அறிவிக்கப்பட்டது. கூடவே தாணு தயாரிப்பில் `வாடிவாசல்' படத்தை சூர்யா நடிப்பில் இயக்குவதையும் அறிவித்தார் வெற்றிமாறன். இந்த இண்டு படத்தில் முதலாவதாக சூரி நடிக்கும் படத்தைத் தொடங்கினார் வெற்றி.

முதலில் `அஜ்னபி' நாவலைத் படமாக்குவதாக இருந்தார். ஆனால், அதன் படப்பிடிப்புகளுக்காக வெளிநாடு போக வேண்டி இருந்தது, கொரோனா காரணமாக அதுக்கு சாத்தியம் இல்லாமல் போனது. அதனால், ஜெயமோகனுடைய `துணைவன்' கதையை எடுத்து படமாக்கத் தொடங்கினார். முதலில் சூரி - பாரதிராஜா இந்தப் படத்தில் நடிக்கத் தொடங்கப்பட்டது. ஆனால், சில காரணங்களுக்காக, பாரதிராஜா இந்தப் படத்திலிருந்து விலனார்.

அந்த ரோலில் நடிக்க விஜய் சேதுபதி படத்திற்குள் வந்தார். ஏற்கனவே `வடசென்னை'யில் அமீருடைய ரோலில் நடிக்க இருந்தது விஜய் சேதுபதிதான். அப்போது சில தேதி பிரச்சனைகளால் வெற்றி மாறன் படத்தில் விஜய் சேதுபதி நடிக்க முடியாமல் போனது. அப்போது மிஸ்ஸான டீம், இப்போது இணைந்திருப்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இந்தப் படத்தின் டைட்டில் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டருடன் சேர்த்து வெளியிடப்பட்டிருக்கிறது. `விடுதலை' என தலைப்பிடப்பட்டிருக்கும் இந்தப் படத்திற்கு இளையராஜா இசையமைக்கிறார். வெற்றியுடைய ஆஸ்தான கேமராமேன் வேல்ராஜ் ஒளிப்பதிவு செய்கிறார்.

மறைந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்திருக்கும் படம் ’லாபம்’. கடந்த 2015-ல் வெளியான ’புறம்போக்கு என்கிற பொதுவுடமை’ படத்துக்குப் பிறகு இரண்டாவது முறையாக`லாபம்' படத்தில் இணைந்தது எஸ்.பி ஜனநாதன்- விஜய் சேதுபதி கூட்டணி. இந்தப் படத்தில் ஸ்ருதிஹாசன், ஜெகபதி பாபு, ரமேஷ் திலக், ப்ரித்விராஜன் எனப் பலரும் நடித்திருக்கிறார்கள். டி.இமான் இசையமைத்திருக்கும் இந்தப் படத்திற்கு ராம்ஜி ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

இந்தப் படத்தின் டிரெய்லரும், `யாழா யாழா' பாடலும் ஏற்கெனவே வெளியாகியிருந்தது. படத்தின் ரிலீஸ் வேலைகளில் ஈடுபட்டிருந்த இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் திடீர் என உடல்நலக்குறைவால் இறந்துவிட்டார். அவரது மறைவுக்குப் பிறகு, "எங்கள் இயக்குநர் எஸ்.பி ஜனநாதன் படத்தின் அனைத்து பணிகளையுயும் முடித்துக் கொடுத்துவிட்டார். படம் ஏப்ரலில் வெளியாகிறது" என அறிவித்திருந்தார் படத்தோட தயாரிப்பாளர்களான விஜய் சேதுபதி மற்றும் ஆறுமுகக் குமார்.

இந்த நிலையில், ‘லாபம்’ ரம்ஜான் பண்டிக்கைக்கு வெளியாகிறது என அதிகாரப்பூர்வமாக அறிவித்து, கூடவே படத்தின் இரண்டாவது சிங்கிளான ’Yaamili Yaamiliyaa’ பாடலையும் வெளியிட்டிருக்கிறது படக்குழு. இந்தப் பாடலை எஸ்.பி ஜனநாதனுக்கு சமர்ப்பிப்பதாக சொன்னார் விஜய் சேதுபதி. அவர், கூறிய மாதிரியே பாடல் முழுக்க எஸ்.பி ஜனநாதனே நிறைந்திருக்கிறார். மேக்கிங் வீடியோ முழுக்க முழுக்க நாயகனாக எஸ்.பி ஜனநாதனே ஆக்கிரமித்திருக்கிறார்.

banner

Related Stories

Related Stories