சினிமா

ஓடிடியில் கார்த்தியின் சுல்தான்; வலிமைக்கு பதில் வெளியான அஜித் பட தகவல் - சினி பைட்ஸ்!

ஓடிடியில் கார்த்தியின் சுல்தான்; வலிமைக்கு பதில் வெளியான அஜித் பட தகவல் - சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் சினிமா ரசிகர்களில் மிகுந்த எதிர்பார்ப்பில் உள்ள படம் அஜித்தின் `வலிமை'. `நேர்கொண்ட பார்வை' படத்திற்குப் பிறகு அஜித் - ஹெச்.வினோத் - போனி கபூர் கூட்டணியில் இந்தப் படம் உருவாகிவருகிறது. படத்தின் ஃபர்ஸ்ட்லுக் மே 1ம் தேதி, அஜித் பிறந்தநாள் அன்று வெளியாகும் என்றும், தொடர்ந்து படம் பற்றிய மற்ற தகவல்களும் வெளியாகும் என்றும் கூறப்பட்டது. பின்பு கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக வலிமை அப்டேட் மே 1ம் தேதி வராது என அறிவித்தார் தயாரிப்பாளர் போனி கபூர்.

வலிமை அஜித்தின் 60வது படம். இந்தப் படத்தைப் பற்றிய தகவலே இன்னும் வராத நிலையில், அஜித்தின் 61வது படம் பற்றிய தகவல்கள் வந்து கொண்டிருக்கிறது. அதில் குறிப்படப்படுகிற விஷயங்கள் என்னவென்றால், அஜித்தின் 61வது படத்தை ஹெச்.வினோத்தான் இயக்குவார் என்றும் - போனி கபூர்தான் தயாரிப்பார் என்றும் கூறப்படுகிறது. இதன் மூலம் நேர்கொண்ட பார்வை, வலிமைக்குப் பிறகு மூன்றாவது முறையாக அஜித் - ஹெச் வினோத் - போனி கபூர் இணையும் என்று கூறப்படுகிறது.

ஓடிடியில் கார்த்தியின் சுல்தான்; வலிமைக்கு பதில் வெளியான அஜித் பட தகவல் - சினி பைட்ஸ்!

ஆனால் இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வரவில்லை. இருந்தாலும், அஜித் - வினோத் இடையே நல்ல புரிதல் இருப்பதால் இந்தக் கூட்டணி மீண்டும் இணைய வாய்ப்புள்ளது என்பதே பொதுவான கருத்தாக இருக்கிறது. ஆனால், அஜித்தோ தனது அடுத்த படத்திற்கான கதையை எதுவும் இன்னும் கேட்கவும் இல்லை, முடிவு செய்யவும் இல்லை என்று ஒரு தரப்பு கூறுகிறது. தற்போதைக்கு அஜித் மற்றும் வினோத் கவனமெல்லாம், வலிமை படத்தின் எஞ்சியுள்ள சில காட்சிகளை எடுத்து படத்தை முடிப்பது மட்டுமே.

கார்த்தி ஹீரோவா நடிக்க கடந்த ஏப்ரல் 2ஆம் தேதி வெளியான படம் சுல்தான். சிவகார்த்திகேயன் நடித்த ரெமோ பட இயக்குநர் பாக்கியராஜ் கண்ணன் இந்தப் படத்தை இயக்கியிருந்தார். கார்த்தியுடன் ராஷ்மிகா மந்தனா, நெப்போலியன், லால், யோகிபாபு எனப் பலரும் நடித்திருந்தனர். இந்தப் படம் தமிழ் மட்டுமின்றி தெலுங்கிலும் நல்ல வரவேற்பை பெற்றது. திரையரங்குகள்ல வெளியாகி தமிழ் தெலுங்கில் பெரிய வெற்றியடைந்தது.

ஓடிடியில் கார்த்தியின் சுல்தான்; வலிமைக்கு பதில் வெளியான அஜித் பட தகவல் - சினி பைட்ஸ்!

இந்தப் படம் இப்போது ஏப்ரல் 30ம் தேதி, தெலுங்கில் Ahaவிலும், தமிழில் மே 2ம் தேதி ஹாட் ஸ்டாரிலும் ரிலீஸ் ஆகிறது. இந்த சூழலில் இப்போது படத்துடைய பாடல் வீடியோக்கள் யூட்யூப்பில் வெளியாகிக் கொண்டிருக்கிறது. முன்னாலேயே ஜெய்சுல்தான், யாரையும் இவ்வளோ அழகா, புது சத்தம் ஆகிய பாடல்களின் வீடியோக்கள் யூட்யூபில் வெளியாகிவிட்டது. இப்போது படத்திலிருந்து நான்காவது பாடலாக `எப்படி இருந்த' என்ற பாடலை வெளியிட்டிருகிறார்கள். இந்தப் பாடல் நல்ல வீயூவ்ஸைப் பெற்றுக் கொண்டிருக்கிறது. இந்தப் படத்தையடுத்து கார்த்தி, மணிரத்னத்தின் பொன்னியின் செல்வன் படத்திலும், மித்ரனின் சர்தார் படத்திலும் நடித்துக் கொண்டிருக்கிறார்.

banner

Related Stories

Related Stories