சினிமா

ஆஸ்கர் மேடையில் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள்!

மறைந்த பாலிவுட் நடிகர் இர்ஃபான் கானுக்கு ஆஸ்கர் விருது விழாவில் அஞ்சலி செலுத்தப்பட்டது

ஆஸ்கர் மேடையில் இர்ஃபான் கானுக்கு அஞ்சலி செலுத்திய ஹாலிவுட் பிரபலங்கள்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

93வது ஆஸ்கர் விருதுகள் இன்று அறிவிக்கப்பட்டது. Mank, Nomadland, Tenet, Soul, Sound of Metal, Judas and the Black Messiah எனப் பல படங்கள் விருதுகளைக் குவித்துக் கொண்டிருக்கிறது. மிகப் புகழ்பெற்ற விருது நிகழ்ச்சி என்பதால், உலகமே இந்த நிகழ்வை உன்னிப்பாக கவனித்துக் கொண்டிருக்கிறது.

இந்த நிகழ்வின் ஒரு பகுதியாக, சமீபத்தில் மறைந்த திரைத் துறையினருக்கான அஞ்சலியும் செலுத்தப்பட்டது. சென்ற ஆண்டும் இந்த ஆண்டும் மிக மோசமனதாவே அமைந்தது. காரணம் மிக அதிகமான மரணங்கள் நிகழ்ந்த காலகட்டம் இதுதான். இதில் மிகப் பிரபலமான பலரின் மரணம் நிகழ்ந்ததும் குறிப்பிடத்தக்கது.

எனவே இறந்த பிரபலங்களில் அகாடாமி விருதுகளுக்குப் பரிட்சயமான நபர்களை திரையில் ஸ்லைட் ஷோவாக ஒளிபரப்பி அவர்களுக்கான அஞ்சலி செலுத்தப்பட்டது. அதில் இந்தியர்களான நடிகர் இர்ஃபான் கான் மற்றும் ஆடை வடிவமைப்பாளர் பானு ஆதித்யா ஆகியோரும் இடம் பெற்றிருந்தனர்.

இதற்கு முன்பு ஆஸ்கர் விருது வென்ற ஸ்லம்டாக் மில்லியனர், லைஃப் ஆஃப் பை ஆகிய படங்களில் இர்ஃபான் கான் நடித்திருந்தார். கூடவே மிகப் பிரபலமான ஹாலிவுட் படம் `ஜூராசிக் பார்க்' படத்திலும் நடித்திருந்தார். ஆடை வடிவமைப்பாளர் பானு, ஆஸ்கர் விருது வென்ற முதல் இந்தியர்.

1982ல் `காந்தி' படத்துக்காக ஆஸ்கர் விருது பெற்றார். இந்த இருவரும் சென்ற வருடம் மறைந்தனர். இவர்களுடன் சேர்த்து இன்னும் பல பிரலபங்களுக்கும் அஞ்சலி செலுத்தப்பட்டது. ஆஸ்கரின் இந்த செயல் பலருக்கும் நெகிழ்ச்சியை தந்திருக்கிறது என்பதால் சமூக வலைத்தலங்களில் இந்த நிகழ்வைப் பற்றி பகிர்ந்து வருகின்றர்.

banner

Related Stories

Related Stories