சினிமா

“இவ்வளவு சீக்கிரம் போயிட்டீங்க” - த்ரிஷாவின் தாயார் உமாவின் உருக்கமான பதிவு! #RIPVivek

மறைந்த நடிகர் விவேக் குறித்து நடிகை த்ரிஷாவின் தாயார் உமா கிருஷ்ணன் பதிவிட்டுள்ளது வைரலாகி வருகிறது.

“இவ்வளவு சீக்கிரம் போயிட்டீங்க” - த்ரிஷாவின் தாயார் உமாவின் உருக்கமான பதிவு! #RIPVivek
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

தமிழ் திரையுலகம் மட்டுமல்லாமல், விவேக்கின் காமெடிகளை ரசித்த ஒவ்வொரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது அவரின் மரணம். அவரது மரணத்திற்கு அஞ்சலி செலுத்த பல சினிமா பிரபலங்களும் நேரிலும், சமூக வலைத்தளங்களிலும் பதிவு செய்தனர். மேலும் விவேக்குடனான தங்களது அனுபவங்களைப் பகிர்ந்து வருகின்றனர்.

அப்படி சிலர் பகிர்ந்து கொண்ட விஷயங்களால், விவேக்கின் இன்னொரு பரிமாணம் வெளிப்படவில்லை என்பது தெரிய வந்திருக்கிறது. என்னவென்றால், விவேக் ஒரு படத்தை இயக்க இருந்தார் என்பதும் அதற்கான வேலைகளை செய்தும் வந்தார் என்பதை சிலர் பகிந்துள்ளனர்.

“இவ்வளவு சீக்கிரம் போயிட்டீங்க” - த்ரிஷாவின் தாயார் உமாவின் உருக்கமான பதிவு! #RIPVivek

நடிகை த்ரிஷாவின் அம்மா உமா கிருஷ்ணன் இது பற்றிக் கூறும் போது. "லேசா லேசா, சாமி என த்ரிஷாவின் ஆரம்ப காலத்தில் இரண்டு படங்களில் நீங்கள் இருந்தீர்கள். அந்த ஷூட்டிங் முழுக்க எங்களை மகிழ்ச்சியாக வைத்திருந்தீர்கள்.

இந்த கொரோனாவுக்கெல்லாம் முன்பு ஒரு நாள் திடீரென கால் செய்து, ஒரு தந்தையும், அவரது வளர்ப்பு மகளையும் பற்றிய கதையை படமாக இயக்க இருக்கிறேன்.

இதில் நானும் த்ரிஷாவும் நடித்தால் நன்றாக இருக்கும் எனக் கூறினீர்கள். எல்லாவற்றையும் ஏற்பாடு செய்துவிட்டு வருவதாக சொன்னீர்கள். இவ்வளவு சீக்கிரம் நீங்கள் எங்களை பிரிந்ததை நம்ப முடியவில்லை" எனப் பதிவு செய்திருந்தார்.

banner

Related Stories

Related Stories