சினிமா

தமிழில் பாடகராகும் துல்கர் சல்மான் : ஹே சினாமிகா படத்தின் புது அப்டேட்!

நடன இயக்குநர் பிருந்தா இயக்கத்தில் உருவாகியிருக்கும் ஹே சினாமிகா படத்தில் பாடல் ஒன்றை பாடியுள்ளார் நடிகர் துல்கர் சல்மான்.

தமிழில் பாடகராகும் துல்கர் சல்மான் : ஹே சினாமிகா படத்தின் புது அப்டேட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் துல்கர் சல்மான். மலையாளம் மட்டுமின்றி தமிழ், தெலுங்கு, இந்தி மொழிகளிலும் நடித்துக் கொண்டிருக்கிறார். இவர் நடிப்பில் தமிழில் உருவாகும் படங்களில் ஒன்று `ஹே சினாமிகா'. இந்தப் படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார் டான்ஸ் மாஸ்டர் பிருந்தா.

இதில் ஹீரோயினாக காஜல் அகர்வாலும், அதிதி ராவ் ஹைதரியும் நடித்திருக்கிறார்கள். கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்தப் படத்துக்கு ப்ரீத்தா ஜெயராமன் ஒளிப்பதிவு செய்திருக்கிறார்.

துல்கர் சிறந்த நடிகர் என்பது போலவே, நல்ல பாடகரும் கூட. சார்லி, காம்ரேட் இன் அமெரிக்கா, பறவா, டியர் காம்ரேட் என சில மலையாளப் படங்களில் பாடி வரவேற்பு பெற்றிருக்கிறார். மலையாளத்தில் பல படங்களில் பாடியிருந்தாலும், இன்னும் மற்ற மொழி படங்களில் துல்கர் பாடவில்லை.

இப்போது பாடகர் துல்கர் தமிழ் சினிமாவிற்கும் வந்துவிட்டார். முதன் முறையாக அவர் பாடும் வேற்று மொழிப் பாடல், ஹே சினாமிகா படத்துக்காக பாடியிருக்கும் தமிழ்ப் பாடல்தான்.

மதன் கார்க்கி இந்தப் பாடலை எழுதியிருக்கார். போன வருடம் டிசம்பர் மாதத்திலேயே இதனுடைய படப்பிடிப்பெல்லாம் முடிந்து, இப்போது படத்துக்கான போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்துவருகிறது. சீக்கிரமே படத்தின் ரிலீஸ் பற்றிய தகவல் வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories