சினிமா

“அது வெறும் நடிப்புப்பா; என்ன திட்டாதீங்க எப்போவ்” - ரசிகர்களுக்கு நட்டியின் ட்வீட் : சினி பைட்ஸ் 

கர்ணன் படத்தில் போலிஸ் அதிகாரியாக நடித்திருந்த நடராஜின் ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் வைரலாகியுள்ளது.

“அது வெறும் நடிப்புப்பா; என்ன திட்டாதீங்க எப்போவ்” - ரசிகர்களுக்கு நட்டியின் ட்வீட் : சினி பைட்ஸ் 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரிசெல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு, நட்டி ஆகியோர் நடித்துள்ளனர்.

தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்திருக்கிறார். கலைப்புலிதாணு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார். இந்தப் படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெற்றிருக்கிறது.

இந்தப் படத்தில் கண்ணபிரான் என்ற காவல் அதிகாரி வேடத்தில் நடித்திருந்தார் நட்டி (எ) நடராஜ் சுப்ரமணி. எதிர்மறை கதாபாத்திரத்தில் நடித்திருந்த இவரின் நடிப்பு மிகவும் பெரிய அளவில் பாராட்டப்பட்டது. கூடவே இதில் அவரின் கதாபாத்திரத்தைப் பார்த்து சிலர் திட்டி மெசேஜ் அனுப்புவதும், கால் செய்து திட்டுவதும் நிகழ்வதாகவும், அது வெறும் நடிப்புதான் திட்டாதீங்க என ட்வீட் ஒன்றை பதிவு செய்துள்ளார். நடராஜின் இந்த ட்விட்டர் பதிவு சமூக வலைதளங்களில் பெருமளவில் வைரலாகியுள்ளது.

2008ல் மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலை மையமாக வைத்து உருவாகியிருக்கும் படம் `மேஜர்'. தெலுங்கில் உருவாகியிருக்கும் இந்தப் படத்தில், தாகுதலில் இருந்து மக்களை காக்க முக்கியப் பங்காற்றிய மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனை பெருமைப்படுத்தும் விதமாக படமாக்கப்பட்டுள்ளது.

தெலுங்கு, மலையாளம், இந்தி ஆகிய மொழிகளில் வெளியாக இருக்கும் இந்தப் படத்தை நடிகர் மகேஷ் பாபு தயாரித்திருக்கிறார். அத்வி ஷேஷ் - மேஜர் சந்தீப்பாக நடித்திருக்கும் இப்படத்தில் சாயி மஞ்ரேகர், சோபிதா, பிரகாஷ் ராஜ், ரேவதி, முரளிஷர்மா ஆகியோரும் நடித்திருக்கிறார்கள்.

தற்போது இந்தப் படத்தின் டீசரை வெளியிட்டிருக்கிறார்கள். மும்பை தாஜ் ஹோட்டலில் நடந்த தாக்குதலை மையமாக வைத்து சில படங்கள் முன்பே வந்திருந்தாலும், இந்தப் படத்தின் மீதான எதிர்பார்ப்பும் அதிகமாக இருக்கிறது.

படத்திற்கு கதை, திரைக்கதை எழுதியிருப்பது, இந்தப் படத்தில் ஹீரோவாக நடிக்கும் அத்வி ஷேஷ். சஷி கிரண் படத்தை இயக்யிருக்கிறார். இந்தப் படம் ஜூலை 2ம் தேதி வெளியாக இருக்கிறது.

banner

Related Stories

Related Stories