சினிமா

கபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!

மாரி செல்வராஜ் அடுத்து துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை இயக்குவதாக அறிவிப்பு வெளியானது.

கபடி வீரராக துருவ் விக்ரம் : ‘கர்ணன்’ படத்தை தொடர்ந்து பயோபிக் படத்தை இயக்கும் மாரி செல்வராஜ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ரஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்திருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

இந்தப் படம் நேற்று வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் பெற்றிருக்கிறது. `கர்ணன்' வெளியாகும் முன்பே, மாரி செல்வராஜ் அடுத்து இயக்குவது துருவ் விக்ரம் நடிக்கும் படத்தை என அறிவிப்பு வெளியானது. சமீபத்திய பேட்டி ஒன்றில் இந்தப் படம் பற்றிப் பேசிய மாரி செல்வராஜ், "இப்போது துருவ் படத்திற்கான ஸ்க்ரிப்ட் வேலைகளை செய்து கொண்டிருக்கிறேன். கர்ணனின் வெளியீட்டு வேலைகளுக்கு இடையிலும் ஸ்க்ரிப்ட் பணிகள் நடந்து கொண்டே இருந்தது.

அது ஒரு பயோபிக் என்பதால் அதனுடைய வேலைகள் கொஞ்சம் சுலபமாகவே இருக்கிறது. துருவ் தற்போது வேறொரு படத்தின் ஷூட்டிங்கில் இருக்கிறார். அதை முடித்து வந்ததும் இந்தப் படத்தை துவங்க இருக்கிறோம்" எனத் தெரிவித்திருக்கிறார். இந்தப் படத்தை பா.ரஞ்சித்தின் நீலம் புரொடக்ஷன்ஸ் தயாரிக்கிறது. இதில் துருவ் ஒரு கபடி வீரராக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

banner

Related Stories

Related Stories