சினிமா

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா... அப்போ ‘விஜய் 65’ உண்மைதானா?

‘குட்பை’ என்ற பாலிவுட் படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார்.

பாலிவுட்டில் என்ட்ரி கொடுக்கும் ராஷ்மிகா மந்தனா... அப்போ ‘விஜய் 65’ உண்மைதானா?
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

கன்னடத்தில் ‘க்ரிக் பார்ட்டி’ படத்தின் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் ராஷ்மிகா மந்தனா. தொடர்ந்து தெலுங்கிலும் சில படங்கள் நடித்து பிரபலமானவர் கார்த்தியின் ‘சுல்தான்’ படம் மூலம் தமிழிலும் நேரடியாக அறிமுகமானார். இப்போது அடுத்த கட்டமாக இந்தி சினிமாவிலும் அறிமுகமாக இருக்கிறார்.

`மிஷன் மஜ்னு' என்ற படம் மூலம்தான் இந்த பாலிவுட் என்ட்ரி நிகழ இருக்கிறது. இந்தப் படம் வெளியாகும் முன்பே தனது அடுத்த இந்தி படத்திற்கும் ரெடியாகிவிட்டார் ராஷ்மிகா. இந்தியில் `குயின்', `சூப்பர் 30' போன்ற படங்களை இயக்கியவரும் லூட்டேரா, ராமன் ராகவ் உட்பட பல படங்களை தயாரித்தவருமான விகாஷ் பால் இயக்கத்தில் அடுத்ததாக இந்தியில் உருவாகும் படம் `குட்பை'.

இந்தப் படத்தில் அமிதாப் பச்சன் முதன்மைக் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மேலும் இதில் இன்னொரு முக்கியமான கதாபாத்திரத்தில் ராஷ்மிகா நடிக்கிறார். இப்படத்தின் படப்பிடிப்பு நேற்று மும்பையில் துவங்கியிருக்கிறது. அமிதாப் பச்சன் ஏப்ரல் 4 முதல் படப்பிடிப்பில் கலந்துகொள்ள இருக்கிறார். முழுக்க முழுக்க ஃபேமிலி என்டெர்டெய்னர் படமாக இது இருக்கும் எனக் கூறுகிறது படக்குழு.

ராஷ்மிகா நடிப்பில் அல்லு அர்ஜூனின் `புஷ்பா' உட்பட சில தெலுங்கு படங்கள் ரிலீஸுக்குத் தயாராகிக் கொண்டிருக்கிறது. மேலும் விஜய் 65 படத்தில் பூஜா ஹெக்டே தவிர்த்து இன்னொரு ஹீரோயினும் இருக்கிறார் எனவும், அதில் ராஷ்மிகா நடிக்கிறார் என்ற தகவலும் சுற்றிக் கொண்டிருக்கிறது.

banner

Related Stories

Related Stories