சினிமா

“குறும்படம் பார்த்து இம்ப்ரஸ் ஆன விஷால்” : #Vishal31 படத்தை இயக்கும் அறிமுக இயக்குநர் !

நடிகர் விஷாலின் 31வது படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார்.

“குறும்படம் பார்த்து இம்ப்ரஸ் ஆன விஷால்” : #Vishal31 படத்தை இயக்கும்  அறிமுக இயக்குநர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

விஷால் நடிப்பில் சமீபத்தில் வெளியான படம் `சக்ரா'. எதிர்பார்த்த அளவு பெரிய வெற்றியடையாத இந்தப் படம், ரசிகர்களிடம் கலவையான ரியக்ஷங்களையே பெற்றது. இதற்கடுத்து தனது அடுத்த படங்களை மிக கவனத்துடன் தேர்ந்தெடுத்து நடித்துக் கொண்டிருக்கிறார்.

தற்போது ஆர்யா வில்லனாக நடிக்கும் `எனிமி' படத்தில் நடித்து வருகிறார். இதன் கடைசி ஷெட்யூல் படப்பிடிப்பு விரைவில் துவங்க இருக்கிறது. ஆனந்த் ஷங்கர் இந்தப் படத்தை இயக்கிவருகிறார். தற்போது தனது அடுத்த படத்தை அறிவித்திருக்கிறார் விஷால். இது விஷால் நடிக்கும் 31வது படமாக உருவாக இருக்கிறது. இந்தப் படத்தை அறிமுக இயக்குநர் து.பா.சரவணன் இயக்குகிறார்.

இவர் இயக்கிய `எது ட்ஹேவையோ அதுவே தர்மம்' என்கிற குறும்படம் பார்த்து மிகவும் இம்ப்ரஸ் ஆன விஷால், தனது படத்தை இயக்கும் வாய்ப்பை அளித்திருக்கிறார். விஷாலில் `விஷால் ஃபிலிம் ஃபேக்டரி' நிறுவனமே தயாரிக்கும் இந்தப் படத்திற்கு இசையமைக்கிறார் யுவன் ஷங்கர் ராஜா.

பாலசுப்ரமணியம் ஒளிப்பதிவு, ஸ்ரீகாந்த படத்தொகுப்பு, எஸ்.எஸ்.மூர்த்தி கலை இயக்கம் என படத்தில் பணியாற்றும் சிலரை அறிவிக்கும் படி படத்தின் மோஷன் போஸ்டர் ஒன்றை வெளியிட்டிருக்கிறார்கள். தற்போது விஷால் நடிப்பில் தயாராகும் எனிமி, நடித்து இயக்கவும் செய்யும் துப்பறிவாளன் ஆகிய படங்களை முடித்துவிட்டு, தனது 31வது படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

banner

Related Stories

Related Stories