சினிமா

“ட்ரெண்டிங்கில் சந்தோஷின் குத்து டான்ஸ்; கபிலனுக்கான ஆர்யாவின் மெனக்கெடல்கள்” - கோலிவுட் சினி பைட்ஸ்!

இசையமைப்பாளர் சந்தோஷ் நாராயணன் பறை இசை கலைஞர்களுடன் இணைந்து குத்து டான்ஸ் ஆடியது பட்டித்தொட்டியெங்கும் வைரலாகி வருகிறது.

“ட்ரெண்டிங்கில் சந்தோஷின் குத்து டான்ஸ்; கபிலனுக்கான ஆர்யாவின் மெனக்கெடல்கள்” - கோலிவுட் சினி பைட்ஸ்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

இயக்குநர் பா.ரஞ்சித் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `சார்பட்டா பரம்பரை'. ஆர்யா, கலையரசன், பசுபதி, துஷாரா, ஜான் கொக்கேன், சந்தோஷ் பிரதீப், ஷபீர், ஜான் விஜய், காளி வெங்கட் எனப் பலரும் இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். 1980களில் சென்னை பகுதிகளில் புழக்கத்தில் இருந்த ஆங்கில குத்துச்சண்டையை மையமாக வைத்து உருவாகியிருக்கிறது படம்.

தற்போது இந்தப் படத்தின் போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடந்து கொண்டிருக்கிறது. படத்தின் போஸ்டர்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றது. நேற்று முன் தினம் இந்தப் படத்தின் கதாபாத்திரங்களை அறிமுகம் செய்யும் வீடியோ ஒன்றை வெளியிட்டிருக்கிறது படக்குழு. அதில் படத்துக்காக நடிகர்கள் தங்களை உடல் ரீதியாக தயார் செய்து கொள்ளும் உடற்பயிற்சி, மன ரீதியாக தயாராக காட்சிகளை ரிகர்சல் செய்வதையும் தொகுத்து வெளியிட்டிருந்தனர்.

காலா படத்திற்குப் பிறகு மூன்று வருடங்கள் கழித்து இரஞ்சித் இயக்கத்தில் வெளியாகவிருக்கும் படம் என்பதே படத்தின் மீதான பெரிய எதிர்பார்ப்பைக் கூட்டியிருக்கிறது. இந்தப் படத்திற்கு முரளி ஒளிப்பதிவு செய்ய, சந்தோஷ் நாராயணன் இசையமைத்திருக்கிறார். விரைவில் படத்தின் டிரெய்லரும் வெளியீட்டுத் தேதியும் அறிவிக்கப்படும் எனக் கூறப்படுகிறது.

தமிழின் முன்னணி இசையமைப்பாளர்களில் ஒருவர் சந்தோஷ் நாராயணன். பல படங்களில் இவரது இசைக்கு பெரிய வரவேற்பைப் பெற்றிருக்கிறது. தற்போது ஜகமே தந்திரம், கர்ணன், சார்பட்டா பரம்பரை எனப் பல படங்களில் பணியாற்றி வருகிறார். இது தவிர சியான் 60, அதாவது கார்த்திக் சுப்பராஜ் இயக்கத்தில் விக்ரம் - துருவ் விக்ரம் இருவரும் இணைந்து நடிக்கும் படத்தின் பணிகளிலும் பிஸியாக இருக்கிறார்.

இந்தப் படத்தில் பணியாற்றும் கலைஞர்களை ஒவ்வொருவராக தினமும் அறிவித்துக் கொண்டிருக்கிறது படக்குழு. அதே நேரத்தில் படத்துக்கான இசைப் பணிகளில் சந்தோஷ் தீவிரமாக இருக்கிறார். அப்படி ஒரு பாடலில் ரெக்காடிங் செஷன் மூடிவடைந்ததும், குழுவினருடன் இணைந்து சந்தோஷ் நாரயணன் நடனமாடும் வீடியோ ஒன்றை ட்விட்டரில் தானே வெளியிட்டிருக்கிறார் சந்தோஷ்.

அந்த வீடியோ தற்போது பரபரப்பாக பகிரப்பட்டு வருகிறது. இந்தப் படங்கள் தவிர விரைவில், டொவினோ தாமஸ் நடிக்கும் Anweshippin Kandethum, துல்கர் சல்மான் நடிக்கும் Salute ஆகிய படங்களின் மூலம் மலையாளத்திலும் அறிமுகமாகிறார் சந்தோஷ் நாராயணன்.

banner

Related Stories

Related Stories