சினிமா

மோகன்லாலுடன் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்? : Barroz படத்தின் புதிய அப்டேட் வெளியானது!

லிடியன் நாதஸ்வரம் இசையமைப்பில் மோகன்லால் இயக்குநராக அறிமுகமாகும் 3டி படத்தில் நடிக்க இருக்கிறாரா அஜித்குமார்?

மோகன்லாலுடன் நடிக்க ஒப்புக்கொண்ட அஜித்? : Barroz படத்தின் புதிய அப்டேட் வெளியானது!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள திரை உலகின் சூப்பர் ஸ்டாராக இருப்பவர் மோகன்லால். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் நடித்து வருகிறார். 350க்கும் மேற்பட்ட படங்களில் பணியாற்றிய மோகன்லால் Barroz: Guardian of D'Gama's Treasure மூலம் இயக்குநராக அறிமுகமாகிறார்.

இந்தப் படம் 3டியில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கு 13 வயதேயான, லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். சந்தோஷ் சிவன் இந்தப் படத்துக்கு ஒளிப்பதிவு செய்கிறார். படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் சில தினங்களுக்கு முன் வெளியிடப்பட்டது. Jijo Punnoose எழுதிய நாவலில் திரை வடிவமாக அதே பெரியல் உருவாகிறது Barroz: Guardian of D'Gama's Treasure.

இயக்குவதுடன் சேர்த்து இந்தப் படத்தில் ஒரு முக்கியமான ரோலிலும் நடிக்கிறார் மோகன்லால். மேலும் ப்ரித்விராஜும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். படத்தின் பூஜை போனவாரம் நடந்த நிலையில் முதல்கட்ட படப்பிடிப்பும் துவங்கியிருக்கிறது. அடுத்த மாதம் கோவாவில் அடுத்தகட்ட படப்பிடிப்பு நடக்க இருக்கிறது எனவும் கூறப்படுகிறது.

இப்போது இந்தப் படத்தைப் பற்றிய வந்திருக்கும் மிகப்பெரிய தகவல் என்னவென்றால், படத்தில் தமிழ் சினிமாவின் முன்னணி நடிகர் அஜித் ஒரு கதாபாத்திரத்தில் நடிக்க இருப்பதாக சொல்லப்படுகிறது. மேலும் மோகன்லாலே கேட்டுக் கொண்டதால் அஜித், நடிக்க ஒப்புக்கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. இது பற்றிய அதிகாரப்பூர்வ தகவல் எதுவும் வெளியாகவில்லை. ஒரு வேளை இந்த தகவல் உண்மையாக இருக்கும் பட்சத்தில் விரைவில் இதைப் பற்றிய அறிவிப்பை எதிர்பார்க்கலாம்.

banner

Related Stories

Related Stories