சினிமா

மோகன்லால் இயக்கி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் லிடியன் : பிரமாண்டமாக நடந்த தொடக்க விழா!

பல நூறு படங்களில் நடித்துள்ள மோகன்லால் தற்போது இயக்குநராகவும் களம் இறங்கியுள்ளது தென்னிந்திய சினிமா ரசிகர்களிடம் பெரும் எதிர்ப்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.

மோகன்லால் இயக்கி நடிக்கும் படத்துக்கு இசையமைக்கும் லிடியன் : பிரமாண்டமாக நடந்த தொடக்க விழா!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாளத்தின் சூப்பர் ஸ்டாராக உள்ள நடிகர் மோகன்லால். நாற்பது ஆண்டுகளுக்கும் மேலாக மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி ஆகிய மொழிகளில் தொடர்ந்து நடித்து வருகிறார். நடிகராக நூற்றுக்கணக்கான படங்களில் பணியாற்ரியவர், இயக்குநராக அறிமுகமாகிறார் என்பது சில மாதங்களுக்கு முன்பு அறிவிக்கப்பட்டது.

அதன்படி Barroz: Guardian of D'Gama's Treasure எனப் பெயரிடப்பட்ட இந்தப் படம் 3டியில் உருவாக இருக்கிறது. இந்தப் படத்திற்கான துவக்கவிழா கொச்சியில் நேற்று நடைபெற்றது. இந்த நிகழ்வில் மம்மூட்டி, ப்ரித்விராஜ், திலீப் உட்பட பல முன்னணி பிரபலங்கள் கலந்து கொண்டனர்.

இதில் இயக்குநராக தனது புதிய பயணத்தைத் துவங்கும் மோகன்லால் தெரிவித்தது பின்வருமாறு, "நான் நடிகனாகவோ, இயக்குநராகவோ ஆவேன் என்பதைப் பற்றி நான் நினைத்ததே கிடையாது. ஆனால், சினிமாவே எனது வாழ்க்கையும் வசிப்பிடமாகவும் மாறிவிட்டது. இப்போது Barroz மூலம் சினிமாவில் இயக்குநராக எனது புதிய பயணத்தை துவங்கியிருக்கிறேன். உங்களுடைய ஆதரவும் ஆசிர்வாதமும் எனக்கு என்றைக்கும் துணை இருக்கும் என நம்புகிறேன்". எனக் கூறியுள்ளார்.

இந்த நிகழ்வில் படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டரும் வெளியிடப்பட்டது. Jijo Punnoose எழுதிய நாவலில் திரை வடிவமாக அதே பெரியல் உருவாகிறது Barroz: Guardian of D'Gama's Treasure. இயக்குவதுடன் சேர்த்து இந்தப் படத்தில் ஒரு முக்கியமான கதாப்பாத்திரத்திலும் நடிக்கிறார் மோகன்லால்.

மேலும் ப்ரித்விராஜும் படத்தில் ஒரு முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார் என இந்த நிகழ்வில் அறிவிக்கப்பட்டது. அதோடு ஸ்பானிஷ் நடிகர்கள் Paz Vega, Rafael Amargo இந்தப் படத்தில் நடித்திருக்கிறார்கள். இந்தப் படத்திற்கு 13 வயதேயான, லிடியன் நாதஸ்வரம் இசையமைக்கிறார். கோவா, போர்சுகல் போன்ற பகுதிகளில் இதற்கான படப்பிடிப்புகள் நடக்க இருக்கிறது.

banner

Related Stories

Related Stories