சினிமா

‘வாழ்த்துகள் தனுஷ்’ ஆனால், அவர் இல்லாமல் அசுரனோ, சிவசாமியோ சாத்தியமில்லை : சுட்டிக்காட்டிய எழுத்தாளர் !

தேசியவிருது பெற்ற தனுஷ், படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தவர்கள் வரை நன்றிகூறி கடிதம் எழுதுகிறார். ஆனால் அதில் பூமணியின் பெயர் இல்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

‘வாழ்த்துகள் தனுஷ்’ ஆனால், அவர் இல்லாமல் அசுரனோ, சிவசாமியோ சாத்தியமில்லை : சுட்டிக்காட்டிய எழுத்தாளர் !
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Prem Kumar
Updated on

ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் தேசிய திரைப்பட விருதுகள் அறிவிக்கப்படும். கடந்த ஆண்டு கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேசிய விருதுகள் அறிவிக்கப்படாத நிலையில், 2019ஆம் ஆண்டுக்கான, 67வது தேசிய திரைப்பட விருதுகள் மார்ச் 24ம் தேதி அறிவிக்கப்பட்டுள்ளன.

வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடிப்பில் வெளியான 2019ல் வெளியான ‘அசுரன்’ திரைப்படத்திற்கு தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும், சிறந்த நடிகருக்கான தேசிய விருது நடிகர் தனுஷுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. இது நடிப்பிற்காக தனுஷ் பெறும் இரண்டாவது விருதாகும். இந்நிலையில், தேசிய விருது கிடைத்து தொடர்பாக நடிகர் தனுஷ் நன்றி கடிதம் ஒன்றை வெளியிட்டார்.

அதில், நிறைய பேருக்கு நன்றி தெரிவித்து நடிகர் தனுஷ் எழுதிய கடிதத்தில், அம்மா, அப்பா, அண்ணன் மற்றும் சக நடிகர்களின் பெயர்களை குறிப்பிட்டுள்ளார். இதனையடுத்து பூமணிக்கு நன்றி தெரிவிக்கவில்லை என சமூக வலைதளங்களில் பலரும் கேள்வி எழுப்பி வருகின்றனர்.

இந்நிலையில் எழுத்தாளர் அதிஷா வெளியிட்டுள்ள முகநூல் பதிவில், “பூமணி இல்லாமல் அசுரன் இல்லை. ஆனால் தேசியவிருது பெற்ற தனுஷ் படத்தில் சிறிய பாத்திரத்தில் நடித்தவர்கள் வரை நன்றிகூறி கடிதம் எழுதுகிறார் தனுஷ். ஆனால் அதில் பூமணியின் பெயர் கூட இல்லை. பூமணி இல்லாமல் சிவசாமி சாத்தியமாகி இருப்பானா... வெற்றிமாறனும் கூட ஒரு நன்றி சொல்லலாம்.

ஓராண்டுக்கு முன்பு சினிமாவில்தான் எதிர்காலம், சினிமாவுக்கு எழுதப்போகிறேன் என்று முடிவெடுத்து நண்பர்களிடம் சொன்னபோது யாருமே பாஸிட்டிவாக ஒரு சொல் கூட சொல்லவில்லை. இங்கே எழுதுகிறவனுக்கு மரியாதை இல்லை ஓடிவிடு அல்லது இயக்குநர் ஆகிவிடு என்றனர். ஆனாலும் விடாப்பிடியாக சினிமாவுக்கு எழுதிக்கொண்டுதான் இருக்கிறேன். இருப்பினும் கடந்த ஓராண்டாக பெற்ற அனுபவங்கள் சிலநேரங்களில் எழுத்தாளர்களுக்கு அவ்வளவுதான் மரியாதை என்பதை உணர்த்தினாலும் சலிப்பாக இருந்தாலும். இதை மாற்றவேண்டும் என்கிற உந்துதல் எப்போதும் இருக்கிறது. மாற்றுவோம்” எனத் தெரிவித்துள்ளார்.

banner

Related Stories

Related Stories