சினிமா

மீண்டும் தேசிய விருது : அடுத்து என்ன எழுத போறீங்க வெற்றி? - நடிகர் தனுஷ் திறந்த மடல்!

அசுரன் படத்துக்காக தேசிய விருது அறிவிக்கப்பட்டதை அடுத்து நடிகர் தனுஷ் நன்றி தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.

மீண்டும் தேசிய விருது : அடுத்து என்ன எழுத போறீங்க வெற்றி? - நடிகர் தனுஷ் திறந்த மடல்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

67வது தேசிய விருதுகள் நேற்று மாலை அறிவிக்கப்பட்டது. இதில் 2019ல் வெளியான படங்களுக்கு விருதுகள் வழங்கப்பட்டது. இதில் அசுரன், விஸ்வாசம், ஒத்த செருப்பு, கேடி, சூப்பர் டீலக்ஸ் உட்பட பல தமிழ் திரைப்படத்தை சேர்ந்த கலைஞர்களுக்கு விருது அறிவிக்கப்பட்டது. இதில் சிறந்த நடிகருக்கான விருது அசுரன் படத்துக்காக நடிகர் தனுஷுக்கு வழங்கப்பட்டது.

தற்போது `க்ரே மேன்' ஹாலிவுட் படத்தின் படப்பிடிப்பிற்காக சென்றிருக்கும் தனுஷ், தேசிய விருது கிடைத்ததை அறிந்து இப்போது அதற்கான நன்றி கடிதம் ஒன்றை சமூக வலைதளத்தில் பதிவிட்டிருக்கிறார்.

அந்தக் கடிதத்தில் அவர் குறிப்பிட்டிருப்பது பின்வருமாறு,

"இன்று காலை எழுந்ததும் அசுரனுக்காக, மிகுந்த மரியாதைக்குரிய தேசிய விருதால் நான் கௌரவிக்கப்பட்டிருப்பதை அறிந்து மகிழ்ச்சியடைந்தேன். ஒரு தேசிய விருது வெல்வதே பலருக்கும் கனவு. ஆனால், இரண்டு தேசிய விருது கிடைப்பதெல்லாம், ஆசிர்வாதம்தான். நான் இவ்வளவு தூரம் வருவேன் என ஒரு போதும் கற்பனை கூட செய்ததில்லை.

மீண்டும் தேசிய விருது : அடுத்து என்ன எழுத போறீங்க வெற்றி? - நடிகர் தனுஷ் திறந்த மடல்!

இதற்காக நிறைய பேருக்கு நன்றி தெரிவிக்க வேண்டும். முதலின் என் அம்மா, அப்பா, மற்றும் என் குருவான அண்ணனுக்கு தெரிவித்துக் கொள்கிறேன். வெற்றி உங்களை முதல் முதலில் பாலுமகேந்திரா சாரின் அலுவலகத்தில் பார்த்த போது, நீங்கள் என் நண்பனாகவும், சக பயணியாகவும், என் சகோதரனாகவும் ஆவாய் என நினைக்கவில்லை.

உங்களுடன் இணைந்து நான்கு படங்களில் பணியாற்றியதையும், இரண்டு படங்களை தயாரித்ததையும் நினைத்து மகிழ்ச்சி கொள்கிறேன். நீங்கள் என் மேல் நம்பிக்கை வைத்ததையும், நான் உங்கள் மேல் நம்பிக்கை வைத்ததையும் நினைத்து பெருமைப்படுகிறேன். இப்போது நீங்கள் எனக்காக அடுத்து என்ன எழுதப்போகிறீர்கள் என ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருக்கிறேன்.

தேசிய விருது ஜூரிகளுக்கு நன்றி. என்னுடைய தயாரிப்பாளர் தாணுவுக்கு நன்றி. அசுரன் படக்குழுவுக்கு நன்றி, குறிப்பாக என்னுடைய குடும்பம் ப்ரியத்திற்குரிய பச்சையம்மா (மஞ்சு வாரியர்), சிதம்பரம் (கென்), முருகன் (தீஜே) உங்களுக்கும் நன்றி. வா அசுரா பாடலுக்காக ஜிவி பிரகாஷுக்கு நன்றி. இந்தப் படத்தை பற்றி மக்களுக்கு கொண்டு சேர்த்த பத்திரிகையாளர்களுக்கும் மீடியாவுக்கும் நன்றி. என் திரைத்துறையிலிருந்து எனக்கு வாழ்த்து சொல்ல நேரம் ஒதுக்கிய அனைவருக்கும் நன்றி.

இறுதியாக என்னுடைய தூண்களான ரசிகர்கள்... நீங்கள் எனக்கு வழங்கியது எந்த பிரதிபலனும் எதிர்பாராமல் அளிக்கும் அன்பு. அதுதான் என்னைத் தொடர்ந்து இயங்க வைக்கிறது. உங்களுக்கு எவ்வளவு நன்றி சொன்னாலும் பத்தாது. அன்பை மட்டும் பரப்புங்கள்.

எண்ணம் போல் வாழ்க்கை.” எனக் குறிப்பிட்டுள்ளார்.

banner

Related Stories

Related Stories