சினிமா

விஜய்க்கு ஜோடி யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘விஜய்65’ படக்குழு!

சன் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகும் விஜய்யின் 65வது திரைப்படத்தில் இணைகிறார் நடிகை பூஜா ஹெக்டே!

விஜய்க்கு ஜோடி யார்? - அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்ட ‘விஜய்65’ படக்குழு!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Vignesh Selvaraj
Updated on

லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடித்த 'மாஸ்டர்' படத்தைத் தொடர்ந்து, தனது 65வது படத்தில் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் நடிக்கிறார் விஜய். சன் பிக்சர்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்து வருகிறது.

இந்தப் படத்தின் இசையமைப்பாளராக அனிருத், ஒளிப்பதிவாளராக மனோஜ் பரமஹம்சா ஆகியோர் பணிபுரிந்து வருகிறார்கள். இன்னும் இப்படத்திற்கு டைட்டில் வைக்கப்படவில்லை.

‘விஜய்65’ படத்தில் விஜய்க்கு நாயகியாக நடிக்க பல்வேறு முன்னணி நாயகிகளிடம் பேச்சுவார்த்தை நடத்தி வந்தது படக்குழு. இந்நிலையில், பூஜா ஹெக்டே நாயகியாக நடிக்கவிருப்பதாகப் படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

தமிழில் மிஷ்கின் இயக்கிய 'முகமூடி' படத்துக்குப் பிறகு பூஜா ஹெக்டே எந்தப் படத்திலும் நடிக்கவில்லை. தற்போது தெலுங்கு மற்றும் இந்தியில் முன்னணி நாயகியாக வலம் வரும் பூஜா ஹெக்டே ‘விஜய்65’ மூலம் மீண்டும் தமிழுக்கு வருகிறார்.

banner

Related Stories

Related Stories