சினிமா

“மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ நிஜத்தை பிரதிபலிக்கக் கூடும்” - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்!

தனுஷ் நடிப்பில் உருவாகி வரும் கர்ணன் படம் தொடர்பாக பிரபல ஒளிப்பதிவாளர் பி.சி.ஸ்ரீராம் ட்விட்டரில் பதிவிட்டுள்ளது படத்தின் மீதான ரசிகர்களின் ஆர்வத்தை மேலும் தூண்டியுள்ளது.

“மாரி செல்வராஜின் ‘கர்ணன்’ நிஜத்தை பிரதிபலிக்கக் கூடும்” - பி.சி.ஸ்ரீராம் ட்வீட்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

பரியேறும் பெருமாள் படத்தின் வெற்றிக்குப் பிறகு மாரி செல்வராஜ் இயக்கத்தில் உருவாகியிருக்கும் படம் `கர்ணன்'. இதில் தனுஷ், லால், ராஜிஷா விஜயன், லட்சுமி ப்ரியா, கெளரி கிஷன், யோகி பாபு ஆகியோர் நடித்துள்ளனர். தேனி ஈஸ்வர் ஒளிப்பதிவு செய்திருக்கும் இந்தப் படத்துக்கு சந்தோஷ் நாராயணன் இசையமத்திருக்கிறார். கலைப்புலி தாணு இந்தப் படத்தை தயாரித்திருக்கிறார்.

கர்ணன் படத்தின் மூன்று பாடல்கள் வெளியாகி பெரிய வரவேற்பைப் பெற்றுள்ளது. நாளை இந்தப் படத்தின் டீசர் வெளியாகவுள்ளது. இந்த நிலையில், ஒளிப்பதிவாளர் பிசி ஸ்ரீராம் இந்தப் படம் பற்றி பதிவிட்ட ஒரு ட்வீட் அதிகம் பகிரப்பட்டு வருகிறது.

"லேப் பணிகளுக்கு இடையே கிடைத்த இடைவேளையில் மாரி செல்வராஜ் - தேனி ஈஸ்வர் இருவருடனும் ஒரு உரையாடல். `பரியேறும் பெருமாள்' ஒரு மாற்று குரலாக ஒலித்தது. சமரசம் ஏதுமின்று எடுக்கப்பட்டதாக இருந்தது. என்னுள் மிகப்பெரிய தாக்கத்தையும் ஏற்படுத்தியது. அதே போல `கர்ணன்' படத்துக்காகவும் காத்துக் கொண்டிருக்கிறேன். இந்தப் படமும் நிஜத்தை பிரதிபலிக்கும் படமாக இருக்கலாம்" எனப் பதிவிட்டிருகிறார்.

இந்த ட்வீட்டுடன் மாரி செல்வராஜ் மற்றும் தேனி ஈஸ்வருடன் இருக்கும் புகைப்படத்தையும் பதிவிட்டிருந்தார் பிசி ஸ்ரீராம். கர்ணன் படத்தின் மீது பெரிய எதிர்பார்ப்பு உள்ள நிலையில் படம் ஏப்ரல் 9ம் தேதி வெளியாகவிருக்கிறது.

banner

Related Stories

Related Stories