சினிமா

OTTக்கு செல்லும் புதுப்படங்கள்; ரீ ரிலீசாகும் பழைய வெற்றி படங்கள்: ரசிகர்களை ஈர்க்க தியேட்டர்கள் வியூகம்!

ஆன்லைன் தளத்தில் புதுப்படங்கள் வெளியாகி வரும் வேளையில் திரையரங்குகளில் பழைய வெற்றி பெற்ற படங்கள் ஒளிப்பரப்பப்பட்டு வருகிறது.

OTTக்கு செல்லும் புதுப்படங்கள்; ரீ ரிலீசாகும் பழைய வெற்றி படங்கள்: ரசிகர்களை ஈர்க்க தியேட்டர்கள் வியூகம்!
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

கொரானா காரணமாக பல துறைகளும் பாதிக்கப்பட்டது. அதில் முக்கியமான துறை சினிமா. மாதக்கணக்கில் மூடிக்கிடந்த தியேட்டர்கள் திறக்கலாம் என்ற உத்தரவு சில மாதங்களுக்கு முன்புதான் வந்தது. ஆனால் பழைய மாதிரி ரசிகர்கள் தியேட்டருக்கு வருவது மிகக் குறைந்தது.

அவர்களை வரவழைக்க தியேட்டர் உரிமையாளர்களும் ஒரு டிக்கெட் வாங்கினால் ஒரு டிக்கெட் இலவசம் போன்ற திட்டங்களை முன் வைத்துப் பார்த்தார்கள். அது பெரிய அளவில் பலனளிக்கவில்லை.

பின்பு பொங்கல் வெளியீடாக விஜய் நடித்த மாஸ்டர் திரைப்படம் வெளியாகி பெரிய அளவு மக்களை தியேட்டருக்கு திரும்ப அழைத்து வந்தது. ஆனால், அதன் பிறகு மீண்டும் பழையபடி ரசிகர்களில் வரத்து குறையத் தொடங்கியது.

மேலும் முன்னணி நடிகர்களின் சில படங்கள் நேரடியாக ஓடிடி தளங்களில் வெளியாகவும் செய்தது. அதனால் முந்தயை காலங்களில் வெற்றி பெற்ற படங்களை மீண்டும் திரையிட்டு மக்களை அழைத்து வர பலரும் முயற்சித்து வருகிறார்கள்.

அதன்படி சென்ற வாரம் அஜித் நடித்து விஷ்ணுவர்தன் இயக்கிய `பில்லா' படத்தை மறுவெளியீடு செய்தார்கள். நாளை சிம்பு நடித்து பெரிய வெற்றிப் படமான `மன்மதன்' படத்தை மறுவெளியீடு செய்கிறார்கள்.

தொடர்ந்து மார்ச் 26ம் தேதி கௌதம் மேனனின் முதல் படமான `மின்னலே', ரஜினிகாந்த் நடித்த ஒரே ஆங்கிலப் படம் `ப்ளட்ஸ்டோன்' படத்தின் தமிழ் டப் வெர்ஷனையும் வெளியிட இருக்கிறார்கள்.

இதற்கு முன்பு செல்வராகவனின் ஆயிரத்தில் ஒருவன், புதுப்பேட்டை படங்களை மறுவெளியீடு செய்த போது, மிகப்பெரிய வரவேற்பு கிடைத்திருக்கிறது. அந்த வரவேற்பு இந்தப் படங்களுக்கும் கிடைக்கும் என்ற நம்பிக்கையில்தான் இத்தனை முயற்சிகளும்.

banner

Related Stories

Related Stories