சினிமா

OTT-க்கு மாறிய ஃபகத் பாசில் : தியேட்டரை விட அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டா? #IrulMovie 

நடிகர் ஃபகத் பாசில் படம் நேரடியாக நெட்ஃப்ளிக்ஸ் தளத்தில் வெளியாகிறது.

 OTT-க்கு மாறிய ஃபகத் பாசில் : தியேட்டரை விட அதிகம் சம்பாதிக்க வாய்ப்பு உண்டா? #IrulMovie 
  • Twitter
  • Facebook
  • WhatsApp
Updated on

மலையாள சினிமாவின் முன்னணி நடிகர் ஃபகத் பாசில். இவரது நடிப்புக்காகவே பெரிய ரசிகர் கூட்டம் உலகம் முழுக்க உண்டு. இவர் நடிப்பில் சென்ற வருடம் ட்ரான்ஸ் திரையரங்கிலும், C U Soon அமேஸான் ப்ரைமிலும் வெளியானது.

தற்போது இவர் நடித்த இன்னொரு படமும் நேரடியாக ஓ.டி.டி தளத்தில் வெளியாக இருக்கிறது. அறிமுக இயக்குநர் Naseef Yusuf Izuddin இயக்கத்தில் ஃபகத் நடித்திருக்கும் இருள் திரைப்படம் தான் அது.

இதில் ஃபகத்துடன் இணைந்து தர்ஷனா ராஜேந்திரன், ஷௌபின் சாஹீர் ஆகியோர் நடித்திருக்கிறார்கள். C U Soon படத்தில் சில கதாபாத்திரங்களை மட்டுமே வைத்து முழுநீளப் படம் உருவாக்கியது போன்று, இந்த இருள் படத்தில் மூன்றே கதாபாத்திரங்களை வைத்து படத்தை உருவாக்கியிருக்கிறார்கள்.

இந்தப் படத்தின் டிரெய்லர் இன்று நெட்ஃப்ளிக்ஸ் யூட்யூப்பில் வெளியிட்டிருக்கிறது. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பு ஏற்படுத்தியிருக்கும் இந்தப் படம் ஏப்ரல் 2ம் தேதி நேரடியாக நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகிறது.

இந்தப் படத்தைத் தொடர்ந்து ஃபகத்தின் நடிப்பில் மாலிக், ஜோஜி படங்களும் ரிலீஸுக்குத் தயாராக இருக்கிறது. இதில் மாலிக் படம் மே 13ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. ஜோஜி படம் நெட்ஃப்ளிக்ஸில் வெளியாகும் எனக் கூறப்படுகிறது.

தற்போது அல்போன்ஸ் புத்ரன் இயக்கத்தில் `பாட்டு' என்ற படத்தில் ஃபகத் நடித்து வருகிறார். இதில் நயன்தாரா ஹீரோயினாக நடிக்கிறார்.

banner

Related Stories

Related Stories